மேலும் அறிய
Advertisement
90's கிட்ஸ் போகி மேளம் ஞாபகம் இருக்கா..! இன்னும் தயாரிச்சுக்கிட்டேதான் இருக்காங்க..! வாங்க கொண்டாடலாம்..
வீழ்ச்சியடைந்து வரும் போகி மேளம் விற்பனை பிளாஸ்டிக் மேளங்களின் விற்பனையால் வீழ்ச்சியை சந்தித்து வரும் போகி மேளம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருந்ததிபுரம் பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக அருந்ததியர், இன மக்கள் போகி மேளம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக செருப்பு தைத்தல், தோல் மூலபொருள் மூலமாக அளவைகளை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளனர். தை திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முன்பான போகி தினத்தை முன்னிட்டு, போகி தினத்தில் விற்கப்படும் தோற்பசையின் மூலமாக செய்யப்பட்ட மேலத்தை தற்பொழுது செய்து வருகின்றனர்.
வாழ்வாதாரம் முற்றுலுமாக
இதுகுறித்து போகி மேளம் செய்யும் ரமணி தெரிவிக்கையில் , எங்களது பிரதான தொழிலாக செருப்பு தைக்கும் தொழிலே,சாலை ஓரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தொழிலை நாங்கள் செய்து வந்தோம். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அருந்ததியர் மக்களுக்கு செருப்பு தைக்கும் தொழிலில் தாட்கோ மூலமாக தமிழக அரசு தோல், பசை மற்றும் உதிரி பாகங்களை வழங்கினர். அரசு அறிவிக்கும் தேவைக்கேற்ப காலணிகளை செய்து அரசிடம் கொடுத்து வந்தோம், எங்களுடைய ஊதியமானது வங்கி கணக்கில் செலுத்தபடும். ஆனால் காலப்போக்கில் இரப்பர் செருப்புகள், தனியார் நிறுவனங்கள் அதிகரித்த நிலையில் எங்களுடைய வாழ்வாதாதரம் முற்றுலுமாக பாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.
மண்பாண்ட சக்கரம்
செருப்பு தைக்கும் கொரோனா காலக்கட்டத்திற்க்கு பிறகு முற்றுலுமாக மாறியது. சாலை ஓரங்களில் செய்த செருப்பு தைக்கும் தொழில் நின்ற நிலையில் எங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாக மாறியுள்ளது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் போகி பண்டிகைக்கு விலங்குகளின் தோல் மூலமாக செய்து விற்பனை செய்வதாக தெரிவித்தார். கொரோனா காலக்கட்டத்திற்க்கு பிறகு மூலப்பொருட்களின் விலை, தோல் விலை, மண்பாண்ட சக்கரம் விலையும் அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா காலக்கட்டத்துக்கு முன்பாக அருந்ததியர் பகுதிகளில் செய்துவந்த போகி மேளம் தொழிலும் நலிவடைந்துள்ளது.பொங்கல் அன்று 15000 முதல் 40000 வரை விற்பனை செய்பட்டு வந்த நிலையில் 15000 மட்டுமே விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தார். தமிழக அரசு தங்களின் வாழ்வாதாரத்துக்காக வழிவகை செய்ய வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
8 வயது முதலே..!
போகி மேளம் தயாரிப்பில் ஈடுபட்ட பத்மாவதி தெரிவிக்கையில், 8 வயது முதலே போகி மேளம் செய்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த மூன்று வருடங்களாக ப்ளாஸ்டிக் மேளங்கள் அதிகரிப்பால் போகி மேளம் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்தார். வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் வாங்கி முதலீடு செய்து வருகிறோம் எனவும், இந்த வருடம் விற்பனை செய்யப்படாத போகி மேளங்கள் அடுத்தாண்டு விற்பனை செய்ய முடியாது என தெரிவித்தார்.
வியாபாரிகள் வரத்து
அருந்ததியர் இன மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம்.அரசு எங்களின் வாழ்வாதரத்தை உயர்த்த கடனுதவிகள், மீண்டும் குலத்தொழில் செய்ய உதவ வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்திற்க்கு பிறகு தேவையான பொருட்கள் கிடைக்காததால் தற்பொழுது இருபதுக்கு மேற்பட்ட வீடுகளில் போகி மேளங்கள் செய்வது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். சுமார் 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களிடம் வந்து போகி மேளங்களை பெற்று சென்று விற்பனை செய்து வரும் நிலையில், தயாராகியுள்ள போகி மேளங்களை வாங்குவதற்கு போதிய அளவில் வியாபாரிகள் வரத்து இல்லையெனவும், குறைவான தொகையே கேட்பதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். நலுவுற்றுள்ள இம்மக்களுக்கு தமிழக அரசு மீண்டும் கைதொழிலுக்கு முன்னுரிமை அளிக்குமா என ஏக்கத்துடன் காத்துகொண்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion