மேலும் அறிய

கார் மீது நாட்டு வெடிகுண்டு; தப்பித்து ஓடியவரை விரட்டி விரட்டி படுகொலை! பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்!

" உயிர் பிழைக்க தப்பியோடியவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலால் பரபரப்பு "

பி.பி.ஜி.டி சங்கர்
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார் . இந்த நிலையில் நேற்று காலை சென்னைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரை வழிமறித்த மர்ம கும்பல் காரின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டு வீசியதையடுத்து, காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. 

கார் மீது நாட்டு வெடிகுண்டு; தப்பித்து ஓடியவரை விரட்டி விரட்டி படுகொலை! பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்!
 
ஓட ஓட விரட்டி கொலை
 
 தன்னை கொலை செய்ய வந்துள்ளார்கள் என்பதை அறிந்து உயிரை கையில் பிடித்து கொண்டு உயிர் பிழைக்க காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார். அங்கும் மறைந்திருந்த மர்ம கும்பல் விடாமல் விரட்டி சென்று பிபிஜி சங்கரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் பிபிஜி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலைக்கான காரணம் என்ன? தொழில் போட்டியா ? அரசியல் காரணமா என பல்வேறு கோணங்களில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கார் மீது நாட்டு வெடிகுண்டு; தப்பித்து ஓடியவரை விரட்டி விரட்டி படுகொலை! பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்!
கார் மீது நாட்டு வெடிகுண்டு; தப்பித்து ஓடியவரை விரட்டி விரட்டி படுகொலை! பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்!
 
அதே பாணியில் மற்றொரு கொலை
 
 
 மேலும் அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட பிபிஜி குமரனின் நெருங்கிய நண்பர் பிபிஜி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிபிஜி குமரன் கொலை செய்யப்பட்ட பாணியிலேயே பிபிஜி சங்கரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 
 
 
 
யார் இந்த பிபிஜி குமரன் ? 
 
சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலரும், தொழிலதிபருமான பிபிஜி குமரன் என்பவர் படுகொலை வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர்  பகுதியை சேர்ந்த வைரம் என்பவரை பழிவாங்கும் நோக்கில் பிபிஜி சங்கர் திட்டமிட்டு இருந்ததாகவும், இது குறித்து தகவல் அறிந்த, குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வைரம் ஆதரவாளர்கள் பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கார் மீது நாட்டு வெடிகுண்டு; தப்பித்து ஓடியவரை விரட்டி விரட்டி படுகொலை! பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்!
 
மேலும் பி.பி.ஜி குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனான மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சங்கர் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா அல்லது பிள்ளைப்பாக்கம் ஊராட்சி திமுக பிரமுகர் ரமேஷ் என்பவர் தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக சங்கர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்த படுகொலை சம்பவத்தால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க! - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget