மேலும் அறிய

Anna University Results: பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்: வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் - பார்ப்பது எப்படி?

Anna University Semester Results 2022: இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிற ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர். 

கொரோனா பெருந்தொற்றுகளால் கடந்த ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தபிறகு கடந்த சில மாதங்களாகக் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 

இந்த நிலையில் பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல்/ மே மாதத்தில் 8ஆவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. அதற்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்காகத் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.

பிற ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?

coe1.annauniv.edu/home/

aucoe.annauniv.edu/regular_result

ஆகிய இரண்டு முகவரிகளை க்ளிக் செய்து, செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Anna University Results: பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்: வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் - பார்ப்பது எப்படி?

coe1.annauniv.edu/home/என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், மாணவர்களின் லாகின் பகுதியில் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் Captcha-வைப் பதிவு செய்ய வேண்டும். 

அதன்பிறகு மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பாடத்திட்டம் மாற்றம்

20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இந்த பொறியியல் பாடத்திட்ட மாற்றம் நடப்புக் கல்வியாண்டிலேயே  (2022- 23) அமலாகி உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை அவர்கள் கொண்டிருக்காததுதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழில் துறையினரின் தேவைக்கும் மாணவர்களின் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைகிறது. 

தேவைக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Chennai Power Cut: சென்னையில் நாளை புதன் கிழமை (14.10.2026) எந்தெந்த இடங்களில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை புதன் கிழமை (14.10.2026) எந்தெந்த இடங்களில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா பாருங்க!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget