மேலும் அறிய

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்ட செய்தியாளர்... பேசமறுத்த நடிகை சுஹாசினி

மலையாள சினிமாவில் நடைபெறும் சர்ச்சை குறித்தும் ஹேமா கமிட்டி குறித்தான அறிக்கை குறித்தும் பேச மறுத்த நடிகை சுஹாசினி

மலையாள சினிமாவில் நடைபெறும் சர்ச்சை குறித்தும், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பேச மறுத்த நடிகை சுஹாசினி

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் ரோட்டரி ராஜன் ஐ பேங்க் சார்பில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ரோட்டரி ராஜன் ஐ பேங்க் சார்பில் பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் கண் தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நடிகை சுஹாசினி மணிரத்னம் கண் தானம்  செய்தற்கான கையொப்பம் இட்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது ,

அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் எனவும் தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கண் தானம் செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் இன்று பொது வெளியில் கையொப்பமிட்டு கண் தானம் செய்தது மிகுந்த ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

நான் தற்பொழுதே ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்து வருகிறேன். தலசீமியா  நோயாளிகளுக்காக குறிப்பாக  குழந்தைகளுக்காக ரத்தம் தானம் கொடுக்க முதல் ஆளாக நான் நிற்பேன். மறைந்ததற்கு பிறகு எல்லா உறுப்புகளையும் தானமாக கொடுக்கலாம் குறிப்பா கண் தானம் செய்ய வேண்டும். மனமுகந்து கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.

மலையாள சினிமாவில் நடைபெறும் சர்ச்சை குறித்தும் ஹேமா கமிட்டி குறித்தான அறிக்கை தொடர்பான கேள்விக்கு பேச மறுத்து நடிகை சுஹாசினி மணிரத்னம் பின் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து, நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளா நடிகர்கள் சங்கத்தின் AMMA (Association of Malayalam Movie Artists) நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget