மேலும் அறிய

ஆருத்ரா மோசடி நிர்வாக இயக்குநர் துபாயில் கைது - தமிழ்நாடு அழைத்து வர முடிவு?

நிர்வாக இயக்குநர் ராஜசேகரை தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கையின் அடிப்படையில் துபாயில் கைது செய்யப்பட்டார்

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் மட்டும் 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்தது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியது. புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

ராஜசேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

இந்நிலையில், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜசேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்லாட் ஒப்பந்தப்படி துபாயில் பதுங்கி இருந்த ராஜசேகரை பிடித்து தருமாறு தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கை வைத்திருந்தது. நிர்வாக இயக்குநர் ராஜசேகரை தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கையின் அடிப்படையில் துபாயில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் ராஜசேகர் துபாயின் குடியுரிமையை பெற முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிக்கிய ஆர்.கே. சுரேஷ் 

ஆருத்ரா வழக்கில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரூசோ என்ற நடிகர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஆர். கே. சுரேஷ் பற்றி  பல தகவல்களை கொடுத்திருந்தார். நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளை தான் காப்பாற்றுவதாக கூறி  சுமார் ரூபாய் 12.50 கோடி  வாங்கியதாக ரூசோ  வாக்குமூலம் அளித்திருந்தார்.

தலைமறைவான நடிகர் ஆர். கே. சுரேஷ் 

நடிகர் ரூசோவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே. சுரேஷுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன நிறுவனருக்கும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உதவி செய்தது கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10 மாத காலமாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

டிசம்பர் 10-ல் நாடு திரும்பும் ஆர்.கே. சுரேஷ்

ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக கருதப்படும் நடிகரும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராக, பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் தனக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெறுமாறு உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில் நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர். கே.சுரேஷ் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளார். இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 8ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Increase; இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Increase; இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Alanganallur Jallikattu: அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Saif Ali Khan Injured: கொடூரம்! பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து - வீட்டின் உள்ளே புகுந்து அட்டாக்
Saif Ali Khan Injured: கொடூரம்! பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து - வீட்டின் உள்ளே புகுந்து அட்டாக்
Hindenburg: அதானியை கதறவிட்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் - மொத்தமாக இழுத்து மூடப்படுவதாக அறிவிப்பு, காரணம் என்ன?
Hindenburg: அதானியை கதறவிட்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் - மொத்தமாக இழுத்து மூடப்படுவதாக அறிவிப்பு, காரணம் என்ன?
Embed widget