காவல்துறை எதுக்கு நிக்குது?.. அரசு பேருந்து ஓட்டுநரை அடிக்க முயன்ற திமுக நிர்வாகி - நடந்தது என்ன?
திருக்கழுக்குன்றம் பகுதியில் திமுக சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு பேருந்து ஓட்டுநரை திமுக நிர்வாகி ஒருவர் அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது "
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ் குறுக்கே வந்ததால், ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி அரசு பேருந்து ஓட்டுனரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அமைச்சரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே திமுகவின் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் மணி மற்றும் பேரூராட்சித் தலைவர் யுவராஜ் தலைமையில் திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அமைச்சரை கண்டித்தும் மற்றும் பதவி விலக கோரி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்க முயன்றதால் பரபரப்பு
மேலும், ஆர்ப்பாட்டத்தின் இடையை பேருந்து நிலையத்திலிருந்து கிராம பேருந்து ஒன்று ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தில் நடுவே சென்றது. இதை பார்த்த வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி மைக்கில் கண்டித்தார். காவல்துறை இதை பார்த்துக்கொண்டு எதற்கு நிற்கிறது, வேறு கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை என காவல்துறையினரை எச்சரிக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுகவை சார்ந்த ஒருவர் பேருந்து ஓட்டுநரை தாக்குவது போல் சென்றனர். இதனால் போலீசார் சமாதானப்படுத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
என்னதான் பிரச்சனை ?
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமித்ஷா விளக்கம் என்ன ?
இந்நிலையில் அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசியதற்கு விளக்கமளித்துள்ளார். அமித்ஷா தெரிவித்ததாவது, “எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; எனது முழு பேச்சையும் கேட்டுவிட்டு பேசுங்கள். நாங்கள், அம்பேத்கருக்கு எதிரானவர்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியானது, எனது உரையை திரித்து, உண்மைக்கு எதிரான கருத்தை முன்வைத்து வருகிறது, அதை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியானது அம்பேத்கருக்கு எதிரானது; இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியினர் வீர் சாவர்க்கரை அவமதித்துள்ளனர். அவசரகால சட்டம் மூலம் , அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக ஆராய்ந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் உள்துறை அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.