Breaking News LIVE: கலைஞர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை!
தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக காணலாம்.

Background
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, கட்சி பாடலை வெளியிடுகிறார். இந்தநிலையில் நடிகர் விஜய் இன்று அவரது பனையூர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார். ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை மஞ்சள் நிற கொடியில் அவரது உருவம், பதித்த கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தார். இன்று அவர் ஏற்ற உள்ள கொடியில், மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் இடம் பெறும் எனவும், நடுவில் விஜய் புகைப்படம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக போலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இரு நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்படுத்துவது குறித்தும், சிறப்பு திட்டங்கள் குறித்தும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், தேர்தல் குறித்து முடிவு எடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக செல்ல உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் முக்கிய 2 கட்சிகள் தனித்து போட்டியிடுவதால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவும் என பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் பங்கு முக்கிய பங்கு வகிக்கும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் நடராஜன் சஸ்பெண்ட் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த 4 பெண் ஆசிரியைகளிடம் விசாரணை தொடர்வதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தகவல்
இ-பேருந்துகளுக்கு கட்டமைப்பை உருவாக்க ₹111.50 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 50% பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ₹300 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. இதன் மூலம், பேருந்து பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்பட்டு சேவை சிறப்பாக இயங்க உறுதுணையாக இருக்கும் என தெரிவிப்பு மேலும், 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் இ-பேருந்துகளுக்கு கட்டமைப்பை உருவாக்க ₹111.50 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு





















