மேலும் அறிய
Advertisement
Agriculture Budget 2022: வெளியாகாத வேளாண் கல்லூரி அறிவிப்பு - திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்
நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் உயர்த்தி விலை அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தோம் அந்த அறிவிப்பும் வரவில்லை ஆகையால் விவசாயிகள் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம்
தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார். அதே போன்று கடந்த ஆண்டு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்பட்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை வாசித்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், இன்று அறிவிக்கப்பட்டு உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகளுடன் விவசாயிகள் நாங்கள் காத்திருந்தோம். இதில் பல எதிர்பார்ப்புகள் நிறைவேறி உள்ளன சில எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம் ஆனால் அது வரவில்லை, அதேபோன்று நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் உயர்த்தி விலை அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தோம் அந்த அறிவிப்பும் வரவில்லை ஆகையால் விவசாயிகள் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம்.
அதே நேரத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் எனவும் இதற்கு சென்னையில் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது, இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களின் விலையை உறுதி செய்யும் வகையில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்து உள்ளார்கள். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் விவசாயத்திற்கு இலவச மின்சார திட்டத்திற்கு 5157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்கத்தக்க ஒன்று. இதே போன்று வேறு எந்த பட்ஜெட்டிலும் இலவச மின்சாரத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது இல்லை ஆகவே விவசாயிகள் இந்தத் திட்டத்தை வரவேற்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் சிறுகுறு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மிகக்குறைந்த தொகை காரணம் டெல்டா மாவட்டங்களில் பல ஆறுகள் மற்றும் சிறு குறு வாய்க்கால்கள் இன்னும் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது பெய்த மழை நீர் வடிய வைக்க கூட முடியாத நிலை இருந்தது அதற்கு கூடுதல் நிதி எதிர்பார்த்தோம் இருந்த போதிலும் ஒதுக்கீடு செய்த நிதியை முழுமையாக பயன்படுத்தி குறுகிய காலத்தில் ஆறுகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் 10 லட்சம் பனை விதைகள் வழங்கும் அறிவிப்பு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க நெல் ஜெயராமன் பெயரில் 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நெல்மணிகளை சேமித்து வைக்க பாதுகாப்பான கிடங்குகள் தேவை அதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்தோம் ஆனால் இந்த பட்ஜெட்டில் அதனை அறிவிக்கவில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion