மேலும் அறிய

Star Movie Review: மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!

Star Movie Review in Tamil: நடிகர் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள “ஸ்டார்” படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம்.

Star Movie Review Tamil

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் கொண்டாடப்படும் ஒருவர் கவின். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. அந்த வகையில் பியார் பிரேம காதல் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் இளன் இயக்கத்தில் ”ஸ்டார்” படத்தில் கவின் நடித்துள்ளார். இப்படம் இன்று (மே 10) தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் விமர்சனத்தை காணலாம். 

படத்தின் கதை

ஸ்டார் படத்தின் ட்ரெயிலரிலும் படத்தின் பெயரிலும் ஏற்கனவே இது ஒரு நடிகனின் கதை என்பதை காட்டிவிட்டனர். அதன் தாக்கமே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது? அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை. 

Star Movie Review: மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!

பாராட்டும்படியான நடிப்பு

பள்ளி, கல்லூரி மாணவனாக, இளைஞனாக, அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளராக கவின் “கலையரசன்” கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்துகிறார். மகனின் நடிப்பின் வெற்றிக்காக உறுதுணையாக இருக்கும் ஒரு தந்தையாக லாலின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. அதேபோல் நாயகிககளான அதிதி, ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்துள்ளனர். கவினின் தாயாக கீதா கைலாசத்தின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தது.

இவர்களை தாண்டி நடிகர் சுகுமார் வரும் காட்சி மிகவும் அற்புதமாக காட்டப்பட்டுள்ளது. சினிமா ஒருவரை எந்தளவு உயர்த்திப் பார்க்கும். அதே அளவிற்கு கீழே தாழ்த்தியும் விடும் என்பதை மிக அழகாக காட்டியிருப்பார்கள். அந்த காட்சியில் சுகுமாரின் சொந்த அனுபவத்தையே இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பதற்கு நிச்சயம் அவரை பாராட்ட வேண்டும். 

கவனிக்க வைத்த விஷயங்கள்

படத்தில் 90களில் தொடங்கி பள்ளி, கல்லூரி மற்றும் அதற்கு அடுத்த காலங்களுக்கு ஏற்ப அதற்கான ஆடைகளும், கவின் முக பாவனைகளும் மாறியிருப்பதும் பாராட்ட வேண்டிய அம்சம். படக்குழுவும் அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்ப பொருட்களை பயன்படுத்தியது (பழைய 500 ரூபாய் நோட்டுகள், வருடங்களுக்கு ஏற்ப சாதாரண போன் முதல் ஸ்மார்ட் போன் வரை) ஆகியவை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. 

கல்லூரி காலங்களுக்கான காதலும், பின் அந்த காதல் பிரிவதும், அதன் பின்பு புதியதாக ஒரு காதல் வருவதும் என்பது ஏற்கனவே பல படங்களில் பார்த்த ஒரு விஷயமாக இந்த படத்தில் அமைந்திருந்தது. மேலும் திரைத்துறையில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சவாலான விஷயங்கள் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அந்த சவாலான விஷயங்களை இயக்குனர் ரசிகர்களுக்கு உயிர்ப்புடன் காட்டியிருக்கிறாரா? என்றால் நிச்சயம் அதற்கு பதில் இல்லை என்பதே ஆகும். 

படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்ததே ட்ரெயிலரில் இடம் பிடித்த காசு இல்லை  என்று கவின் பேசும் வசனம் தான். ஆனால், படத்தில் அந்த வசனங்கள் ஆங்காங்கே சில இடங்களில் இடம்பெற்றாலும் அதன் வலியை பெரியளவில் உணர்த்தவில்லை என்பதே உண்மை. ஏனென்றால், பணம் இல்லாதபோதுதான் நம்மைச் சுற்றியுள்ள உண்மையான உறவு யார் என்பது புரியும். அதேபோல, யாரிடமாவது சென்று காசு இல்லை என்று சொல்வதற்கே நாம் மிகவும் தயங்கிதான் நிற்போம். அந்த வசனத்தை படத்தில் இன்னும் உயிர்ப்புடன் இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கலாம். நடிகர் கவினும் அந்த  காட்சிகளில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்.

மீண்டு(ம்) வந்த யுவன் 

படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது யுவன்ஷங்கர் ராஜாவின் இசை. குறிப்பாக, மும்பையில் கவின் படும் இன்னல்களின்போது வரும் மெல்லிசைக்கு தியேட்டரில் பலத்த வரவேற்பு. அந்த பாடலின்போது பலரும் ஆர்ப்பரித்து ரசித்த நிலையில், அதுபோன்ற ஒரு நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு அந்த பாடல் நிச்சயம் அவர்களது கடந்த கால கஷ்டங்களை கண் முன் கொண்டு வரும்.

அதேபோல, கவின் அவரது கல்லூரி நிகழ்ச்சியில் பெண்களை ஊக்கப்படுத்தும் வசனம் பாராட்டத்தக்கது. விபத்திற்கு பிறகு முடங்கும் கவினின் காட்சிகளும் நன்றாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கவினின் குடும்பம், அவரது காதல் மற்றும் அவரது மனைவியைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகளுக்கு அளித்த முக்கியத்துவம் அளவிற்கு அவர் நடிகனாக போராடும் காட்சிகளுக்கு அளிக்கவில்லை என்றே சொல்லலாம். 

Star Movie Review: மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!

ட்விஸ்ட் கொடுத்த கிளைமேக்ஸ்

படத்தின் கிளைமேக்ஸ் நல்ல ட்விஸ்ட். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஸ்டார் என்று படத்திற்கு பெயர் வைத்துவிட்டு, நடிப்பு, சூழல் மற்றும் குடும்பத்திற்கு இடையில் போராடும் ஒருவனின் போராட்டத்தில் அவனது நடிப்பு போராட்டத்திற்கும் இன்னும் முக்கியத்துவம் அளித்திருந்திந்தால் ஸ்டார் நிச்சயம் இன்னும் ஜொலித்திருக்கும்.  இருப்பினும் எந்த ஒரு முகம் சுழிக்கும் வகையிலான காட்சியும் இல்லாமல் குடும்பங்களுடன் சென்று பார்க்கும் வகையில் ஸ்டார் படத்தை எடுத்ததற்கு இயக்குனரை பாராட்டலாம். இந்த கோடை விடுமுறையை ஸ்டார் படத்துடன் கொண்டாடுங்கள். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs RCB: “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
Breaking News LIVE: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
Breaking News LIVE: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sellur Raju about Rahul : ”அண்ணே டெலிட் பண்ணிட்டேன்” PHONE போட்ட எடப்பாடி! பதுங்கிய செல்லூர் ராஜூ!Modi Interview  : ”நான் மனிதப்பிறவியே இல்ல கடவுள் அனுப்பி வச்சாரு” மோடி பேச்சால் சர்ச்சைPolice vs Conductor : ”ஏட்டய்யா இவங்கள விடக்கூடாது! போலீஸுக்கே டிக்கெட்டா?” நடத்துநருடன் வாக்குவாதம்Chennai News : மாமுல் கேட்ட அதிகாரி? கண்ணீருடன் வியாபாரி பாயுமா நடவடிக்கை?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs RCB: “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
Breaking News LIVE: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
Breaking News LIVE: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
கோவை: தொடர் கனமழை: தண்ணீர் லாரி மீது வேரோடு சாய்ந்த மரம்!
கோவை: தொடர் கனமழை: தண்ணீர் லாரி மீது வேரோடு சாய்ந்த மரம்!
Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?
Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?
HBD Rahman: ரகுமானின் எவர்கிரீன் சங்கமம்! மழைத்துளி மழைத்துளி பாடல் உருவானது எப்படி?
HBD Rahman: ரகுமானின் எவர்கிரீன் சங்கமம்! மழைத்துளி மழைத்துளி பாடல் உருவானது எப்படி?
Rasipalan: கும்பத்துக்கு நட்பு மேம்படும்; மீனத்துக்கு வெற்றிகள் குவியும்: இன்றைய ராசி பலன் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு நட்பு மேம்படும்; மீனத்துக்கு வெற்றிகள் குவியும்: இன்றைய ராசி பலன் இதோ!
Embed widget