Brahmastra: Part One–Shiva: பிரமிக்க வைத்ததா பிரம்மாஸ்த்ரா? உட்கார்ந்து பார்க்க வாய்ப்பிருக்கிறதா?
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருகான், நாகார்ஜூனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைக்கு வந்துள்ள படம் பிரம்மாஸ்த்ரா!
Ayan Mukerji
Amitabh Bachan, Ranbir Kapoor, Alia Bhatt,
புராண பின்னனியைக் கொண்ட கதை
புராணத்தில் கடவுள்கள் பயன்படுத்தியதாக கூறப்பட்டிருக்கும் ஆயுதங்களிளேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் பிரம்மாஸ்திரம். இதனை மூன்று பாகங்களாக பிரித்து அவற்றை பாதுகாக்கும் பொறுப்பில் ஷாருகான், நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உள்ளனர். இப்படி பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாஸ்திரத்தின் பாகங்களை எப்படியாவது ஒன்று சேர்த்து, அதீத சக்தி ஒன்றை உயிர்த்தெழ வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் படத்தின் வில்லி ஜுனூன். அப்படி அந்த சக்தி மீண்டும் உயிர்த்தெழுந்தால் உலகிற்கே ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுகின்றனர் பிரம்மாஸ்திரத்தின் பாதுகாவலர்கள். வில்லியின் இந்த பயங்கர திட்டங்களுக்கு தடையாக வருகிறார் சிவா என்ற இளைஞன். அவனுக்கும் பிரம்மாஸ்திரத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த அதீத சக்தி யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது பிரம்மாஸ்த்ரா திரைப்படம்.
சொறுகல்களும் சறுக்கல்களும்!
அஸ்த்ராவர்ஸ் என்னும் கான்செப்டை புதிதாக சினிமா உலகிற்குள் நுழைத்துள்ளது பிரம்மாஸ்த்ரா். ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், படத்தினுடைய ‘ஒன்-லைன்’ ஸ்டோரி முதலில் வியப்பூட்டும் வகையிலேயே இருந்தது. அழகான மலைப்பிரதேசங்கள், பிரம்மாண்ட க்ராபிக்ஸ் காட்சிகள் என படத்தின் ஒளிப்பதிவு ஸ்கோர் செய்துள்ளது.முதல் பாதியில், படத்திற்கு அழகு சேர்த்த க்ராபிக்ஸ் காட்சிகள் இரண்டாம் பாதியில், ரசிகர்களை சலிக்க வைத்து விட்டது. நம்ப முடியாத சண்டை காட்சிகளுக்கு பாலிவுட் பெயர் போனது என்ற கருத்து நிலவி வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில், இந்த படத்திலும் கொஞ்சம் ஓவர் கற்பனையுடனே சண்டை காட்சிகளை வைத்துள்ளனர். காட்சிக்கு காட்சி வைக்கப்பட்டிருக்கும் வி எப் எக்ஸ்சும், தேவையில்லாத இடங்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்களும் ரசிகர்களை எரிச்சலடைய செய்கின்றன.
ரன்பீர்-ஆலியா இடையேயான ‘கெமிஸ்ட்ரீ’ எப்போதும் போல நன்றாகவே வர்க்-அவுட் ஆகியுள்ளது.இருப்பினும் க்ளைமேக்ஸ் வரை இவர்கள் வளவளவென பேசும் லவ் டைலாக்குகள் “முடியலடா டேய்” என ரசிகர்களை முனுமுனுக்க வைக்கிறது. படத்தை இழுக்க வேண்டும் என்பதற்காகவே ஆங்காங்கே மிகைப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகள் படத்தின் மிகப்பெரும் சறுக்கல். “என்னதான் மேஜிக் படம் என்றாலும் லாஜிக் வேண்டாமா?” என கேள்வியெழுப்புகின்றனர் ரசிகர்கள். கடந்த 5 வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த படம் என்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்பபுகள் எழுந்தன. ஆனால், கடைசியில் அனைவருக்கும் ‘பல்ப்’ கொடுத்துள்ளது பிரம்மாஸ்த்ரா. க்ராபிக்ஸ் காட்சிகளுக்கு எடுக்கப்பட்ட மெனக்கெடல்கள் கதைக்கும் எடுக்கப்பட்டிருந்தால், படம் இன்னும் நன்றாகவே பேசப்பட்டிரு்ககும்.
கதாப்பாத்திரங்களின் ஸ்கோர்:
காளி பக்தனாக, சாதாரண இளைஞராக சிவா கதாப்பாத்திரத்தில் வருகிறார் ரன்பீர். அவரது காதலியாக வரும் ஆலியா பட், ரன்பீருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருபவர் அமிதாப் பச்சன். இந்த வயதிலும், தனது நடிப்பால் அனைவரையும் ஈர்கிறார். கேமியோ ரோலில் சிறிது நேரங்களே வரும் நாகார்ஜூனாவும், ஷாருகானும் தன் பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாகினி சீரியலில் நடித்து புகழ பெற்ற மெளனி ராய், இதில் வில்லியாக மிரட்ட தவறியிருக்கிறார்.
தேவ் பார்ட் 2:
பிரம்மாஸ்திரா திரைப்படம், அஸ்த்ராவர்ஸ்சின் முதல் பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவ் பார்ட்-2 என்ற படம் தயாராகவுள்ளது. இதையும் பிரம்மாஸ்திரா இயக்குனர் அயான் முகர்ஜீயே இயக்கவுள்ளார். இந்த படமாவது ரசிகர்களால் வரவேற்க்கப்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.