மேலும் அறிய

Healthy Food:சிறந்த காலை உணவு எது? எதையெல்லாம் சாப்பிட கூடாது? நிபுணர்களின் பரிந்துரை!

Healthy Food: காலை உணவில் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி மருத்துவர்கள் தெரிவிப்பதை காணலாம்.

ஒரு நாளைக்கான ஆற்றலை வழங்க கூடியது காலை உணவு. இரவு உணவு சாப்பிட பிறகு நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் காலை உணவையும் தவிர்க்க கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காலை உணவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் உள்ளிட்டவைகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த, அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட, துரித உணவு போன்றவற்றை காலை உணவாக சாப்பிட கூடாது. 

காலை உணவில் எதெல்லாம் சாப்பிட கூடாது என்பது பற்றி மருத்துவர்கள் தெரிவிப்பதை இங்கே காணலாம். 

பிரெட்:

காலை உணவிற்கு பிரெட் டோஸ்ட், பிரெட் ஜாம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மைதா பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதோடு, பிரெட் பதப்படுத்தப்பட்ட உணவு. ஸ்நாக்ஸ் நேரத்தில் எப்போதாவது இதை சாப்பிடலாம். ஆனால், காலை உணவிற்கு சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லை. 

சர்க்கரை அதிகமுள்ள கார்ன் ப்ளேக்ஸ்:

 காலை உணவாக கார்ன்ப்ளேக்ஸ், cereal ஆகியவற்றை காலை உணவாக சாப்பிட கூடாது. இதில் சர்க்கரை சேர்க்கபடுவதால் ஊட்டச்சத்துக்கள் இருந்தும் இதை காலை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் நார்ச்சத்தும் குறைவாக உள்ளது. 

ஜூஸ் வகைகள்:

ஜூஸ் வகைகளை திட உணவுகள் எதுவும் சாப்பிடாமல் குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் இது  இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். பழச்சாறாக குடிக்காமல் காலை உணவில் பழங்களை அப்படியே சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. பழச்சாறு குடிப்பதாக இருந்தால் காலை 11 மணி அளவில் குடிக்கலாம். அதுவும் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது. 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

காலை உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இறைச்சி ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் பதப்படுத்தப்படுவது ஆரோக்கியமற்றது. பல்வேறு உடல்நிலை பாதிகப்புகளுக்கு வழிவகுக்கும். 

யோகர்ட்:

யோகர்ட் மற்றும் ப்ரோபயாடிக்குகளின் நல்ல ஆதாரமாக இருந்தாலும், சர்க்கரை சேர்க்கப்பட்ட  யோகர்ட் காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்காது. அதற்கு பதிலாக, வீட்டில் தயார் செய்யும் தயிர் சாப்பிடலா,. கடைகளில் வாங்குவதாக இருந்தால் இனிப்பு சேர்க்கதாகவற்றை வாங்கலாம்.

எதை காலை உணவில் சேர்க்கலமா?

இட்லி, தோசை உடன் சாம்பார், சட்னி, கோதுமை ரவை உப்புமா, சிறுதானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளுடன் பழங்கள், நட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். 

வேக வைத்த முட்டை, ஆம்லெட் சாப்பிடலாம். முட்டையில் புரதம் மற்றும் பி வைட்டமின்கள், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன.

பிரெட் டோஸ்ட் சாப்பிட விரும்புபவர்கள்  முழு தானிய பிரெட் தெரிவு செய்யலாம். இருப்பினும் காலை உணவிற்கு சிறந்த தேர்வு இல்லை என்றே சொல்கிறார்கள். 

சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை. சியா விதைகள் சேர்த்து ஓட்ஸ், யோகர்ட் உடன் சேர்த்து சாப்பிடலாம். புரோட்டீன் ஷேக்கில் சேர்க்கலாம். புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகளும் இதில் நிறைந்துள்ளன. இதோடு, சூரியகாந்திவிதை, பூசணி விதை உள்ளிட்டவற்றையும் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளில் சத்துக்கள் இருப்பதால் அவற்றை காலை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமானது. இதோடு, உங்கள் உடலுக்கு எது நன்மை தரும் என்பதையும் கவனத்தோடு சாப்பிடலாம். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Embed widget