Weight Loss: உடல் எடையை குறைக்கனும்னா உருளைக்கிழங்கு சாப்பிட கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Potatoes For Weight Loss: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுப்பவர்கள் உருளைக்கிழங்கை முதலில் டயட் லிஸ்ட்டில் இருந்து நீக்கிவிடுவர். ஆனால், அப்படி செய்ய வேண்டியதில்லை என்கிண்றனர் நிபுணகள்.
உருளைக்கிழங்கு சுவையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. உருளைக்கிழங்கு ரோஸ்ட், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், டிக்கி, கட்லட், பஜ்ஜி என எதுவாக இருந்தாலும் ருசியை மறக்க முடியாது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் தங்களது டயட் லிஸ்டில் உருளைக்கிழங்கை சேர்த்துகொள்ள மாடார்கள், ஏனெனில், உருளைக்கிழங்கில் அதிகர் கார்போஃஹைட்ரேட் இருப்பதால் கொழுப்பை அதிகரித்துவிடும் என்று சொல்லப்படுவது வழக்கம்.
உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?
உருளைக்கிழங்கு சாப்பிட கூடாது என்பது ஒரு சில ஹெல்த் கண்டிசன்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், அது எல்லாருக்கும் பொதுவானது அல்லது. எந்த உணவாக இருந்தாலும் சரியான அளவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உருளைக்கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா போன்ற சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தீப்ஷிகா. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அளவோடு உருளைக்கிழங்கு சாப்பிடுவது உதவலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
நார்ச்சத்து:
உருளைக்கிழங்கில் நார்ச்சத்து இருக்கிறது. இது செரிமான திறனை துரிதப்படுத்து. அதோடு, இதிலுள்ள ஃபைபர் உங்களுக்கு நீண்ட நேரம் பசி உணர்வை தராது. அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படாமல் பார்த்துகொள்ளும். 100 கிராம் உருளைக்கிழங்கில் 80 கலோரிகள் இருக்கிறது.
ஊட்டச்சத்துகள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகளும் இருக்கின்றன. இவை உடலிலுள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். பொட்டாசியம் உடலில் நீர்ச்சமநிலையை உறுதி செய்யும்.
ஹெல்தி கார்ப்ஸ்:
இதில் Complex carbs இருப்பதால் அளவோடு சாப்பிடுவது உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு உதவலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்?
உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது, அதிக எண்ணெயில் வறுப்பது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். வேக வைத்து குறைந்த எண்ணெயில் சமைத்து சாப்பிடுவது நல்லது.
சப்பாத்தி, சோறு உள்ளிட்டவற்றோடு சேர்த்து உருளைக்கிழங்கை சாப்பிடுங்க. இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும். இது உடல் எடையை குறைக்க உதவலாம்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.