Viral Tortoise : சுத்தி பாக்கப்போறேன் ஜாலியா.. தொப்பியுடன் ஆமை.. வாவ் காட்சி வைரல்..
முதியவர் ஒருவர் தன் செல்ல ஆமைக்கு தொப்பி அணிவித்து அதனுடன் கடைத்தெருவில் நடந்து ஷாப்பிங் செல்லும் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
மனிதர்கள் எவ்வளவுதான் பிரயத்தனப்பட்டு தங்கள் வித்தியாசமான வீடியோக்களை பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக முயன்றாலும், அவர்களது செல்லப் பிராணிகள், விலங்குகள், பறவைகள் குறித்த வீடியோக்கள் ஒரே எட்டில் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து ஹிட் அடித்து விடுகின்றன.
அந்த வகையில் முன்னதாக முதியவர் ஒருவர் தன் செல்ல ஆமைக்கு தொப்பி அணிவித்து அதனுடன் கடைத்தெருவில் நடந்து ஷாப்பிங் செல்லும் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
ஆமையின் ஒரு பாதம் இந்த முதியவரின் பாண்ட் துணியுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வயது முதிர்ந்த ஆமையும் முதியவரும் மெல்ல அடி எடுத்து வைத்து வரும் இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
View this post on Instagram
கிட்டத்தட்ட 4 லட்சம் பார்வையாளர்களையும் 19 ஆயிரம் லைக்ஸ்களையும் குவித்து இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்து வருகிறது.
இதேபோல், டில்லி ஜி எனும் மீட்கப்பட்ட ஆமை ஸ்கிப்பி எனும் நாயுடன் ஒன்றாக விளையாடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து வருகின்றன.
View this post on Instagram
’டில்லி ஜி’ குட்டி ஆமையாக ஆறு ஆண்டுகளுக்கு முன் அதன் பாதுகாவலரால் மீட்கப்பட்டு வீட்டுக்கு வந்தது தொடங்கி, அங்கிருக்கும் பிற நாய்கள், பூனைகளுடன் ஒன்றாக சன் பாத் எடுப்பது, கேரட் சாப்பிடுவது, தூங்குவது, கொஞ்சி விளையாடுவது என அனைத்து வீடியோக்களும் டில்லி ஜியின் பிரத்யேகப் பக்கத்தில் பகிரப்பட்டு ஹிட் அடித்து வருகின்றன.
tillygthetortoise எனும் பெயரில் செயல்பட்டு வரும் இந்தப் பக்கம் இன்ஸ்டா பயனர்களைக் கவர்ந்து வருகிறது.