குளிர் நேரத்தில் சரும மாற்றங்களால் தொல்லையா? கொஞ்சம் இத ட்ரை பண்ணுங்க!
பருவமழை காலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கிறது என்பதால் பருவநிலைக்கு ஏற்ற நம்முடைய சருமத்தினைப்பாதுகாக்க வேண்டும்.
குளிர்காலம் நெருங்கும் நேரத்தில் முகப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால், டோனர், பேஸ்வாஷ் போன்றவற்றினைப்பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்கொண்டால் நிச்சயம் நல்ல பலன் அளிக்கும்.
முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் இதனை நிச்சயம் எல்லா நேரத்திலும் நம்மால் நிறைவேற்ற முடியாது. ஆம் குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் போன்ற பல்வேறு பருவநிலைக்கு ஏற்ப நமது சருமம் வெவ்வேறு வகையில் பாதிப்பினைச் சந்திக்கிறது. குறிப்பாக பருவமழைக் காலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது சருமத்தைப் பாதிக்கக்கூடும். இதனால் மக்கள் பெரும்பாலும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், முகப்பரு மற்றும் பருக்கள் பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் என்ன செய்தாலும் முகப்பொலிவினைப் பெற முடியாது. இருப்பினும் நம்முடையத் தேவைக்கு ஏற்ப சருமத்தினை பாதுகாக்க அனைவரும் முயல வேண்டும். குறிப்பாக பருவநிலைக்கு ஏற்ற நம்முடைய சருமத்தினைப் பாதுகாக்கவேண்டும் என்ற நிலையில், மழைக்காலத்தில் ஒரு தனித்துவத்துமான சருமப்பராமரிப்பு அவசியமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் மழை சமயத்தில் எப்போதும் ஒளிரும் சருமத்தினைப் பெறுவதற்கான சில வழிமுறைகள் என்ன என்பது குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.
டோனர் (Toner): பருவமழையின் காரணமாக ஏற்படும் ஈரப்பதம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக சருமத்தின் துளைகளில் அழுக்கு மற்றும் அசுத்தங்கள் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் இதனை அகற்ற விரும்பினால் நிச்சயம் டோனரைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் இல்லாத டோனரைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அது உங்கள் சருமத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தாது.
சன்ஸ்கிரீன் (Sunscreen) : சன்ஸ்கிரீனை நாம் வெயில் காலத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை. எனவே உங்கள் சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், இளமையாக இருக்கவேண்டும் என்றால் ஆண்டு முழுவதும் சன்ஸ்கிரீன் உபயோகித்தினை வாழ்க்கையின் ஒருபகுதியாக்கி கொள்ளலாம்.
ஃபேஸ்வாஷ்(Facewash): நிச்சயம் நாம் பல்வேறு வேலைகளுக்காக வெளியில் செல்ல நேரிடும். அந்த நேரத்தில் சருமத்தின் மேற்பரப்பில் அழுக்கு நிறைந்து காணப்படும். எனவே இதனை அகற்றுவதற்கு உங்களுக்கு பேஸ்வாஷ் உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது சருமத்தில் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தினையும் அளிக்கிறது.
மாய்ஸ்சரைசர்(Moisturizer : ஈரப்பதத்தின் காரணமாக சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு ஏற்படலாம். எனவே இந்த எண்ணெய் சுரப்பை சரிசெய்ய ஊட்டமளிக்கும் மற்றும் எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
பேஸ் மாஸ்க் (Face mask): நாம் பேஸ் மாஸ்க்கினைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் துளைகளுக்குள் ஆழமாக சிக்கியுள்ள பாக்டீரியா, அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவற்றை அகற்ற உதவியாக உள்ளது. எனவே இதனை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், உங்களது தோல் வகைக்கு ஏற்றவாறு இதனை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம் அல்லது உங்களது சருமத்திற்கு ஏற்றவாறு வீட்டிலேயே போஸ்மாஸ்க் ஒன்றினை தயார் செய்துகொள்ளலாம்.