Google doodle: ஸ்பார்க்ளிங் புத்தாண்டு- சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!
Google doodle: 2023-ன் கடைசி நாளை கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடுகிறது. புத்தாண்டு சிறப்பு டூடுலும் வெளியிடப்பட உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. கண்கவர் வானவேடிக்கை, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கட்டிடங்கள், என புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டை சிறப்பாக வரவேற்க கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது. 'New Year's Eve’ டூடுல் வெளியிட்டுள்ளது
கூகுள் டூடுல்:
வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம். இந்தாண்டு புத்தாண்டிற்கு முந்தைய நாளிலேயே டூடுலை வெளியிட்டிருந்தது. அதில் 2023-இல் இருக்கும் ‘0’ என்பது மட்டும் ஸ்பார்க்ளிங் உலக உருளை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் மேல பார்ட்டி பார்ப்பர்ஸ் மின்னுவது போலவும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராக இருப்பது போலவும் டூடுல் அமைந்துள்ளது.
இதோடு கூகுள் புத்தாண்டு வாழ்த்தையும் இணைந்துள்ளது. கூகுள் எழுத்துக்களில் உள்ள 'O' ஸ்பார்க்ளிங் உலகம் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். கடிகாரம் 12 மணிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு புத்தாண்டை மகிழ்ச்சியுடன், புதிய பழக்கங்களுடன் வெற்றியை எதிர்நோக்கி தொடங்க காத்திருக்கின்றனர். வாழ்த்துகள்.” என்று கூகுள் டூடுல் பற்றி குறிப்பிட்டுள்ளது.
பார்ட்டி பாப்பர்ஸ்
1998-ம் ஆண்டில் இருந்து கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு வருகிறது. இதுவரை 4000 கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி பாப்பர்ஸ் எல்லாருக்கும் விருப்பமான ஒன்று. கூகுள் அதனைப் புரிந்துகொண்டு மிகவும் அழகான பார்ட்டி பாப்பர்ஸை வெளியிட்டுள்ளது. அது இசையுடன் பார்ட்டி பாப்பர்ஸ் வெடித்து ஸ்கிரீன் முழுவதும் பல வண்ணங்களில் ஒளிர்கிறது.
பார்ட்டி கொண்டாடுங்கள்
- Google.com-க்குச் செல்லவும்.
- "New year 2023 " அல்லது "New year's eve" என்று தேடல் பகுதியில் டைப் செய்து பார்க்கவும்.
- திரையின் மேல் இடதுபுறத்தில், தேடல் பகுதியின் கீழே, பார்ட்டி பாப்பர்ஸ் இருக்கும்.
- அனிமேஷன் செய்யப்பட்ட கூம்பு வடிவ பாப்பர்ஸ் மீது கிளிக் செய்யவும்.
- நீங்கள் அதைச் செய்தவுடன், திரையில் சத்தத்துடன் பாப்பர்ஸ் வெடிக்கும்.
- அதிலிருந்து வண்ண வண்ண பார்ட்டி பேப்பர்ஸ் வெட்டித்து திரை முழுவதும் வரும்.
- ஜாலியாக விர்ச்சுவல் புத்தாண்டு கொண்டாடலாம்.
கூகுள் டூடுல் பார்ட்டி பாப்பர்ஸ் - https://www.google.com/doodles/new-years-eve-2023
2023 ம் ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டான 2024ம் ஆண்டு வர, இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்க உலக நாடுகள் அனைத்தும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
முடியபோகும் 2023 ம் ஆண்டு பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சாதனைகள், மறைவுகள், சோகங்கள் என அடுத்தடுத்து வந்து நம்மை மூச்சுவிட முடியாமல் செய்தது. எது எப்படியாகினும் ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு பிறக்கும்போது நாம் அந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வேண்டும் என்றே எண்ணி நமக்கு விருப்பமான தெய்வங்களை வேண்டி அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
புத்தாண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக நண்பர்களுக்கு வாழ்த்துகளை அனுப்புங்கள்.புத்தாண்டு வருகையில் அனைவரிடமும் ’ இந்தாண்டு நான் நிச்சயம் செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!’ என்று ஒரு லிஸ்ட் தவறாமல் இடம்பெறும். அதாங்க, 'Resolutions'.இதோ உடல் நலனோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
மன ஆரோக்கியம் முக்கியம் :
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே போலதான் மனநலனும். மன அழுத்தம், சோகமான மனநிலை உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். மனம் நலமாக இல்லையென்றால், அதிகமாக சாப்பிடும் பழக்கம் ஏற்படும் அல்லது முறையாக உணவு உட்கொள்ள முடியாமல்போகும். இதுபோன்ற சிக்கல்களை தடுக்க மன ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மனதுக்கு பிடித்தவற்றை செய்யலாம். புதிதாக எதாவது கற்கலாம். மனதுக்கு புத்துணர்ச்சி தரும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.