Kanchipuram Silk Saree: ஒரிஜினல் காஞ்சி பட்டுதானா என்பதை கண்டறிவது எப்படி? இதோ டிப்ஸ்!
How to Identify Original Kanchipuram Silk Saree: காஞ்சிபுரம் பட்டு ஒரிஜினலா என எப்படி தெரிந்துகொள்வது பற்றிய விவரங்களை காணலாம்.

பட்டு என்றதும் காஞ்சிபுரம் பட்டு பெரும்பாலானோரின் நினைவிற்கு வரும். காஞ்சி பட்டின் தரம் எல்லாரும் அறிந்ததே. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டு உலக அளவில் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இதற்கு முதன்மையான காரணம் நெசவாளர்களின் உழைப்பும் அவர்களின் கற்பனையில் அழகாக உருவாகும் பட்டு. பாரம்பரியம் மாறாமல் இருப்பதே காஞ்சிபுரம் பட்டு புடைவைகளுக்கு இருக்கும் வரவேற்பு இன்னும் குறையவில்லை என்று சொல்லலாம்.
காஞ்சிபுரம் பட்டு
காஞ்சிரத்தில் நெசவாளர்கள் 12 நாட்கள் உழைத்து ஒரு பட்டுப்புடவையை தயாரிக்கின்றனர். மற்ற இடங்கள் 3 நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தினமும் நெசவுக்காக மட்டும் 10 மணி நேரம் செலவிடுகின்றனர். திருவிழா திருமணம் என விழா காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும்போது 16 மணி நேரம் நெசவு செய்வார்களாம்.
கைத்தறி பட்டுப்புடவையில் கோவில்களில் உள்ள சிற்ப வடிவங்கள் என அதை சேவையில் வடிவமைப்பர். தரமான காஞ்சி பட்டுப்புடவை 700 கிராம் வரை இருக்கும். அதில் 100 கிராம் பாடர் உள்ள ஜரிகையில் 40 கிராம் வெள்ளி. 0.2 சதவீதம் தங்கம் கலந்திருக்குமாம்.
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை கண்டுபிடிப்பது எப்படி?
- அசல் பட்டுப்புடவைகளில் சில முத்திரைகள் இடம் பெற்றிருக்கும்.
- கைத்தறியால் நெய்யப்பட்டது என்பதற்கு அடையாளமாக கைத்தறி முத்திரை
- காஞ்சி பட்டுப்புடவைகளுக்கான புவிசார் குறியீடு
- கூட்டுறவு நிறுவாந்த்தில் இருந்து வாங்கப்பட்டதற்கான குறியீடு
- அசல் பட்டுக்கான சில்க் மார்க் முத்திரை
- மத்திய அரசின் கைத்தறி முத்திரை
- பட்டுப்புடவையில் தரத்தை தமிழ்நாடு ஜரி சென்டர், மத்திய அரசின் தர பரிசோதனை மையம் போன்ற இடங்களில் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.
இதோடு, நீங்களே வீடுகளில் இந்த டெஸ்ட்களை செய்து பார்க்கலாம்.
ஜரிகை டெஸ்ட்
- காஞ்சி பட்டு புடவையின் பாடரில் உள்ள ஜரிகையை கவனமாக பார்த்தால் அது போலியானதா என்று கண்டறிந்துவிடலாம். பட்டுடன் வெள்ளி இழைகள் மற்றும் தங்க நிறைத்தில் இருக்கும். mulberry silk -ஆ என்பதை தொட்டுப் பார்த்தாலே தெரியும்.
- ஜரிகையை உரசி பார்த்தால் அதன் நிறம் மாறாமல் இருந்தால் ஒரிஜினல் பட்டு.
- பட்டுப்புடவையில் உள்ள ஜரிகையை கொஞ்சம் கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை நெருப்பில் காட்டினால் எரிந்து புகை வரும். அது sulfur போல வாசனை வரும். ஒரிஜினல் பட்டு கொண்டு தயாரிக்கப்பட்டதில் மட்டுமே இப்படி வாசனை வரும்.
ஒரிஜினல் பட்டு சேலையை தொட்டு பார்த்தால் மென்மையாக இருக்கும். கடினமாக இருந்தால் அது போலியானது என்று அர்த்தம்.
காஞ்சிபுரம் பட்டு சேலைகள் சூரிய ஒளியில் சில Angle-லில் பளபளப்பாக இருக்கும். ஜொலிக்கவில்லை என்றால் அது போலி. போலி பட்டு புடவையில் மலிவான மற்றும் தரமற்ற நூல்கள் பயன்படுத்தப்படும். உண்மையான பட்டு புடவை நூல்கள் வலிமையானவை மற்றும் எளிதில் பாதிப்படையாது. எனவே நூல்களின் தரம் மற்றும் ஆயுள் ஆகியவற்றை சரிபார்க்கவும். உண்மையான பட்டு புடவையை அடையாளம் காண இது ஒரு சிறந்த வழியாகும்.
நெசவு செய்யப்பட்டு என்பதை அதன் வடிவமைப்பை சற்று உற்று கவனித்தால் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கென தனியாக நேர்த்தி ஒன்றிருக்கும். பட்டு வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். குறைந்த விலை என்றால் அது தரமில்லாததுதான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

