Bra Fitting Tips: சரியான பிரா அணியாவிட்டால் உயிருக்கு ஆபத்து? அளவை அறிவது எப்படி? எந்த ஆடைக்கு எந்த பிரா பொருந்தும்?
Bra Fitting Tips: சரியான பிரா அணியாவிட்டால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Bra Fitting Tips: எந்த ஆடைக்கு எந்த உள்ளாடை பொருந்தும் என்ற தகவல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாடையின் முக்கியத்துவம் :
ப்ரா எனப்படும் உள்ளாடை அணிவது எவ்வளவு பொதுவான விஷயமாக இருந்தாலும், சிலர் அதை ரகசியமாக கருதுகிறார்கள். ஆனால் அடிப்படை உண்மை என்னவென்றால் இது ஒவ்வொரு பெண்ணும் பயன்படுத்தப்படும் பொருளாகும். ஒவ்வொரு நபருக்கும் இது தெரியும், இருப்பினும், இதைப் பற்றி பேசுவது என்பது மிகவும் குறைவு. அதனால் தான் பிரா பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. எந்த வகையான பிரா அணிவது என்று தெரியாமல், அணிந்தாலே போதுமானது என நினைப்பது உடல் நலக்குறைவுக்கு வழிவகை செய்கிறது.
சரியான பிரா அணியாவிட்டால் முதுகுவலி, ரத்த ஓட்டத்தில் சிக்கல், நிணநீர் அமைப்பு அடைப்பு என பல உடல்நலப் பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும். அதனால் உள்ளாடையின் அளவை தெரிந்து பயன்படுத்த வேண்டும். எந்த மாதிரியான உடைக்கு என்ன மாதிரி உள்ளடையை அணிய வேண்டும் என்பதும் அறிந்திருக்க வேண்டும். சரியான உள்ளாடையை அணிவது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையெனில், நீங்கள் மிகவும் அசௌகரியமாக உணருவீர்கள். எந்த மாதிரியான உள்ளாடயை எந்த ஆடையுடன் அணியலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
ப்ரா அளவை அறிவது எப்படி? (Bra Size Guide)
ஒரு அளவிடும் டேப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு மார்பின் மையப் பகுதியை அளவிட வேண்டும். பின்னர் பேண்ட் (Band) அளவை எடுத்துக் கொள்ளுங்கள். அது மார்புக்குக் கீழே உள்ள அளவீடு. இப்போது உங்கள் மார்பக அளவு 34 ஆகவும், பேண்ட் அளவு 32 ஆகவும் இருந்தால் இதற்கு இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி அந்த வித்தியாசம் 1, 2 அல்லது 3 ஆக இருந்தால், கப் அளவை அதற்கேற்ப தீர்மானிக்க வெண்டும். வித்தியாசம் 1 என்றால் ஏ, 2 என்றால் பி, 3 என்றால் சி அளவிலான கப்பை தேர்வு செய்ய வேண்டும். இது சரியான ப்ரா அளவைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. ஆனால் நேரடியாக கடைக்குச் சென்று ப்ராவை வாங்க முயற்சிப்பது நல்லது. இந்த ப்ரா அளவை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். மேலும் ஒரு பிராவை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. உதாரணமாக உங்கள் மார்பளவு 37 அங்குலமாக இருந்தால், உங்கள் பேண்ட் அளவு 34 ஆக இருந்தால், வித்தியாசம் 3 ஆக இருக்கும். அதன்படி உங்கள் ப்ரா அளவு 34C ஆகும்.
எந்த உடைக்கு என்ன உள்ளாடை அணிய வேண்டும்?
- வெள்ளை உடை அணிந்தால், உள்ளே வெள்ளை நிற பிரா அணிய வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். ஆனால் அப்படிச் செய்தால் ப்ரா இன்னும் தெளிவாகத் தெரிய வாய்ப்பு உள்ளது. எனவே வெள்ளை நிற ஆடைகள், சட்டைகள், டி-சர்ட்களுடன் உங்கள் தோள் நிற அல்லது க்ரே நிற பிராவை அணிய முயற்சி செய்யலாம்.
- டி-ஷர்ட்டுகளின் கீழ் டி-ஷர்ட் பிரா அணிவது நல்லது. இது ப்ரா கோடு கண்ணுக்கு தெரியாததாக ஆக்குகிறது. குனிந்தாலும் சரி, வெளியே போனாலும் சரி, எந்த பிரச்சனையும் இல்லாமல் வசதியாக இருக்கும். கப் அளவு சரியாக இருந்தாலும் பேண்ட் சரியாக அமைக்கப்படாவிட்டால் பிரச்னைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. V-neck Bra மற்றும் bralet இரண்டும் இதில் நன்றாக செல்கிறது.
- கடற்கரை உடைகள், ஸ்லீவ்லெஸ், பிரேலெட் டாப்ஸ் அணிந்தால், அவற்றிற்கு ஸ்ட்ராப்லெஸ் பிராக்கள் சரியான தேர்வாக இருக்கும்.
- ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை இறுக்கமாக இருந்தால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.