மேலும் அறிய

Gas Cylinders | பலூன் மாதிரி புஸ்ஸுன்னு போகுதா காஸ்... உங்கள் காஸ் சிலிண்டரை சேமிக்க இதுதான் பெஸ்ட் ஐடியா!

இவையெல்லாம் கேட்க சிறிதாக இருக்கலாம்; ஆனால் நடைமுறைப்படுத்தினால் பெரிய அளவில் பயனளிக்கும். எனவே இந்த முறையை முயன்று பாருங்கள்...

‛மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு...’ ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் சிலிண்டர். நிலையில்லாத விலையில், அலைபோடும் காஸ் சிலிண்டர்கள் பயன்பாடு பொதுமக்களுக்கு அத்யாவசியமானது. அடுப்பு எரிந்தால் தான், உயிர் வாழ முடியும் என்பதால், எந்த காரணம் கொண்டும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆனால், வந்திறங்கும் சிலிண்டர்கள், குறைந்தது 40 நாட்களாகவது வர வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் ஆசையாக இருக்கும். ஆனால், 30 நாட்களுக்குள் சில நேரம் முடியும் போதும் தான், எரிச்சல் மேலோங்கும். அதற்கு காரணம் இருக்கிறது. அதை சரி செய்தால், நீங்கள் பயன்படுத்தும் முறையில் கீழ் காணும் தவறுகள் இருந்து, அதை திருத்திக் கொண்டால், கட்டாயம் நீங்கள் நினைத்தது போல காஸ் சிலிண்டர் பயன்பாடு நீண்ட நாட்கள் வரும். 


Gas Cylinders | பலூன் மாதிரி புஸ்ஸுன்னு போகுதா காஸ்... உங்கள் காஸ் சிலிண்டரை சேமிக்க இதுதான் பெஸ்ட் ஐடியா!

இதோ உங்களுக்கான டிப்ஸ்:

  • பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் போது, அது ஈரமாக இல்லாதவாறு துடைத்து அல்லது காய வைத்ததை உபயோகிக்க வேண்டும். இதனால் பாத்திரம் எளிதில் சூடாகும், எரிபொருள் சிக்கனமும் இருக்கும். 
  • சமைக்கும் முன்பு, நாம் பலர் செய்யத் தவறும் ஒரு விசயம்... அதற்குரிய பொருட்களை பாத்திரத்தில் வைத்த பின் ரெடி செய்வது அல்லது தேடுவது. இது இரண்டும் காஸ் பயன்பாட்டை அதிகரிக்கும். சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்த பிறகு தான், அடுப்பை பற்ற வைக்க வேண்டும். இதனால் வீண் தேடுதல் படலம் தவிர்கக்ப்பட்டு காஸ் மிச்சம் செய்யப்படும்.
  • இதுவும் அதே மாதிரி தான். வீட்டில் அனைவரும் ப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம். நேரடியாக ப்ரிட்ஜில் இருந்து பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தினால், அதன் குளிர் தன்மையை போக்க சூடாகும் நேரம் அதிகரிக்கும். இதனால் எரிபொருள் அதிகம் செலவாகும். அதுவே ப்ரிட்ஜில் இருந்து எடுத்த பொருளை சிறிது நேரம் வெளியில் வைத்து, அதன் குளுமை போனதும், சமைப்பது சிலிண்டரை மிச்சப்படுத்தும்.
  • நாம் சமைக்க பயன்படுத்தும் பாத்திரம் சூடாகிவிட்டால், உடனே ஸ்டவ்வை ‛சிம்’மில் வைக்க வேண்டும். பாத்திரம் சூடாக மட்டுமே வேகம் தேவை. அதன் பின் குறைந்த அளவில் சமைப்பது தான் காஸ் சிலிண்டருக்கும் நல்லது. சமைக்கும் உணவுக்கும் நல்லது. மித வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுக்கு ஊட்டசத்து அதிகம் என்கிறார்கள். 
  • சமைக்கும் போது, நாம் செய்யும் முக்கிய தவறில் ஒன்று, பாத்திரத்தை திறந்து வைத்து சமைப்பது. இதனால் கொதிப்பான் வெளியேறி சமையல் நேரம் அதிகமாகும். அப்போது காஸ் சிலிண்டர் இன்னும் அதிகம் செலவாகும். பாத்திரத்தை மூடி சமைக்க வேண்டும். 


Gas Cylinders | பலூன் மாதிரி புஸ்ஸுன்னு போகுதா காஸ்... உங்கள் காஸ் சிலிண்டரை சேமிக்க இதுதான் பெஸ்ட் ஐடியா!

  • குக்கர் ஒரு விரைவு சமையல் முறை என்பதால், குக்கரில் சமைப்பது பெரிய அளவில் காஸ் சிலிண்டர் செலவை மிச்சப்படுத்தும். முடிந்த வரை குக்கம் பயன்பாடு சிலிண்டருக்கு ஆயுள் தரும். 
  • தண்ணீர் அதிகம் பயன்படுத்துவது, தேவைக்கு அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும். தண்ணீர் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான சமையல் நேரமும் அதிகரிக்கும். இதனால் காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரிக்கும்.
  • சுடுதண்ணீர் அதிகம் பயன்படுத்துபவர் என்றால், அடிக்கடி அதற்காக காஸ் பயன்படுத்தாமல் ஒரு முறை சுட வைத்து விட்டு பின்னர் அதை தெர்மாஸ் பாட்டில் போன்றவற்றை கொண்டு நீண்ட பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
  • மிக முக்கியமான ஒன்று... அடிக்கடி நமது காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பை சோதனை செய்து கொள்ள வேண்டும். ரெகுலேட்டர், பர்னர், பைப்புகள் சரியாக இருக்கிறதா, லீக் ஆகிறதா என்பதை சோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன், சமைத்ததும், சிலிண்டரை ஆப் செய்து விடுவது கசிவிலிருந்து பாதுகாக்கும்.

இவையெல்லாம் கேட்க சிறிதாக இருக்கலாம்; ஆனால் நடைமுறைப்படுத்தினால் பெரிய அளவில் பயனளிக்கும். எனவே இந்த முறையை முயன்று பாருங்கள்... உங்கள் காஸ் சிலிண்டர் நீங்கள் நினைத்த நாட்களுக்கு பயன்படலாம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Embed widget