Hair Loss : முன்பக்கம் முடி கொட்டுதா? கவலைப்பட்டா இன்னும்தான் கொட்டும்.. ஆயுர்வேதம் கொடுக்கும் பெஸ்ட் டிப் இதோ..
மன அழுத்தம், நோய் தொற்று, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.
நம்மில் பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறோம். மன அழுத்தம், நோய் தொற்று, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும். இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான தீர்வினை செய்யாவிட்டால் பிற்காலத்தில் அது வழுக்கையாக கூட ஆகலாம்.
முடி உதிர்வுக்கு ஆயுர்வேதம்:
முடி உதிர்வு பிரச்சனைக்கு பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பாரம்பரியமான வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம். எலும்பு திசுக்களுக்கும் முடி உதிர்தலுக்கும் சம்பந்தம் உள்ளது. எலும்பு திசுக்கள் அதன் வலுவை இழந்து பலவீனமாகி விட்டால் அது முடிஉதிர்தலை ஏற்படுத்தும். ஆயுர்வேத வைத்திய முறையில் பலவிதமான மருத்துவ எண்ணெய்கள் பயன்படுத்தப்படும். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும். அதனால் நெல்லிக்காயை வைத்து அந்த எண்ணெய் தயாரிக்கப்படுவதால் அவை முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். ரசாயனங்களை பயன்படுத்தாமல் தலைமுடிக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். ஆயுர்வேத வைத்தியத்தின் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்வதன் மூலம் வேறு சில நன்மைகளையும் பெறமுடியும்.
பொடுகை கட்டுப்படுத்தலாம்:
பொடுகு உச்சந்தலையை சேதப்படுத்தி முடி உதிர்வை அதிகரிக்கிறது. ஆயுர்வேத முறைப்படி முடிக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது அந்த மூலிகையில் வேப்பிலை மற்றும் வெந்தயம் சேர்க்கப்படுவதால் அவை தலையை முழுமையாக சுத்தம் செய்து பொடுகை கட்டுப்படுத்துகிறது. ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் அந்த மூலிகைகளில் இருப்பதால் அது முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
முடியின் தன்மையை மேம்படுத்துதல்:
பிராமி, ஜடமான்சி மற்றும் ஆம்லா போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களின் கலவையில் தயாரிக்கப்படும் மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் முடியின் தன்மையை மென்மையாக மாற்றலாம். வேம்பு, நெல்லிக்காய், ஹென்னா, கற்றாழை போன்றவற்றை கலந்து அரைத்து ஒரு ஹேர் பேக் போல போடுவதால் பல நன்மைகளை பெறலாம்.
நெல்லிக்காய் மூலம் தீர்வு:
நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை பெரும்பாலும் ஆயுர்வேத வைத்தியத்தில் பரிந்துரைக்கப்படும். இதனுடன் சேர்த்து பிரிங்கராஜ் பயன்படுத்தப்படும். இவற்றை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய்யை பயன்படுத்தும் போது இயற்கையாகவே முடி உதிர்வதை முன்னரே தடுக்க முடியும்.
நரைமுடிக்கு தீர்வு:
வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் நரை முடி வரும். பிரிங்கராஜ் பயன்படுத்தும் போது முடியில் உள்ள மெலனின் அளவை குறைக்கும். அதனால் பிரிங்கராஜ் மூலிகை எண்ணெயில் பயன்படுத்தப்படும் போது இளநரை வராமல் தடுக்கும்.
மன அழுத்தத்தை குறைக்கும்:
இன்றைய வாழ்க்கை முறை சூழ்நிலையால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. முடி உதிர்தல் மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திலும் பல பிரச்சனைகளுக்கு ஏராளமனோர் ஆளாகின்றனர். பிராமி மற்றும் ஜபம் போன்ற மூலிகைகளை எண்ணெயில் கலந்து கொள்வதன் மூலம் மனதையும் உடலையும் தளர்த்த முடியும்.