Cocount Milk Halwa: சுவையான தேங்காய் பால் ஹல்வா... அசத்தலாக செய்வது ரொம்ப சிம்பிள்..!
ஈசியான முறையில் தேங்காய் பால் ஹல்வா எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேங்காயில் ஏராளமான சத்துகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பளபளப்பான கூந்தல் மற்றும் சருமத்தை பெறவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பாலை கொண்டு சுவையான ஹல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1 பெரியது
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
முந்தரி பருப்பு - 10 கிராம்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1 கப்
செய்முறை
பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை சிறிய துண்டுகளாக்கி நறுக்கி, மிக்ஸியில் அரைத்து தேங்காய் பாலை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு துண்டு தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும். கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து லேசாக வறுக்கவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும் ஒரு கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து ஊற்ற வேண்டும். தேங்காய் பாலை நன்றாக கிளறி விட்டு அதில் அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்தே செய்ய ஹல்வா செய்ய வேண்டும். இடைவிடாமல் 15 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விடவும். கட்டிப்படாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருந்தால், தேங்காய் பால் ஹல்வா பதத்திற்கு நன்று சுருண்டு வரும்.
கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரி பருப்பை போட்டு இறக்கி விடவும். இப்போது சுவையான புதுமையான தேங்காய் பால் அல்வா தயார்.
மேலும் படிக்க