One Pot Rasam Rice: குக்கரில் ரசம் சாதம்.. டக்கு டக்குன்னு செய்யலாம் மழைக்கு இதமா.. இதோ ரெசிப்பி..
One Pot Rasam Rcie: குக்கரில் ரசம் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இங்கே காணலாம்.
ஆரோக்கியமாகவும் எளிதாக ஏதாவது உணவு செய்ய வேண்டும் என்பவர்களுக்கு ஒன் பாட் ரசம் சாதம் ரெசிபி உதவும். மழை, குளிர் காலத்தில் ரசம் சாப்பிடுவது நல்லது. குக்கரில் எளிதாக செய்ய கூடிய ரசம் செய்வது எப்பது என்று காணலாம்.
என்னென்ன தேவை?
அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
புளி - சிறிதளவு
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் -2
மிளகு, சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் தூள் - ஒரு டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை:
ஒன் பாட் ரசம் சாதம் செய்வது எளிதானது. முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். புளி ஊற வைக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பொடியாக வேண்டும் என்றால் அப்படியே நறுக்கலாம்.
பூண்டு தோல் உரித்து, மிளகு, சீரகத்துடன் நன்றாக விழுதுபோல அரைத்து தனியே வைக்கவும்.
அடுப்பில், மிதமான தீயில் குக்கரை வைக்கவும். இப்போது 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும். வெண்ணெய் சிறிதளவு சேர்ப்பது ரசம் சாதம் சுவையாக இருக்க உதவும்.
நெய் நன்றாக காய்ந்ததும், காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு சீரக விழுது, தக்காளி சேர்க்கவும். தக்காளி லேசாக வதங்கியதும் அதில் கரைத்த புளி தண்ணீரை சேர்க்கவும். இப்போது அரிசி, பருப்பு கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சாதம் நன்றாக குழைந்து வர வேண்டும் என்பதால் கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் சேர்க்கலாம். மஞ்சள் தூள்,சாம்பார் தூள், ரசப் பொடி இருந்தால் அதையும் சேர்த்து குக்கரை மூடி வைத்து 5-6 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான். பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி சுட சட ரசம் சாதத்தை சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு ரோஸ்ட், ஆம்லெட், மீன் வறுவல் என உங்களுக்கு விருப்பமானதுடன் ஒன் பாட் ரசம் சாதத்தை சாப்பிடலாம்.