News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Beetroot pachadi: சுவையான பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Beetroot pachadi: பீட்ரூட் பச்சடி செய்முறை பற்றி விரிவாக காணலாம்.

FOLLOW US: 
Share:

என்னென்ன தேவை?

பீட்ரூட் - 3

தயிர் - ஒரு கப்

துருவிய தேங்காய் - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 2 

இஞ்சி - சிறிதளவு

சீரகம் - ஒரு ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பீட்ரூட் துருவி எடுக்கவும். தேங்காயையும் துருவி எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், தேங்காய், உப்பு, துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலக்கவும். 

தாளிக்க..

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து நன்றாக வதங்கியதும் கருவேப்பிலை சேர்த்து பீட்ரூட் கலவையுடன் சேர்க்கவும். அவ்ளோதான் பீட்ரூட் பச்சடி தயார்.

பீட்ரூட் ரெசிபிகள் சில..

நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக மிக்ஸில் அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். டயட்டில்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட் – கேரட் ஜூஸ் நன்றாக இருக்கும். மேலும் பீட்ரூட்- கேரட் ஜூஸில், நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால்  ஜூரணிக்க அதிக நேரம் எடுக்கும். அடிக்கடி பசியும்  எடுக்காது என்பதால் உடல் எடையைக்குறைக்க இது சிறந்த டயட்டாக இருக்கும். மேலும் நாம் சாப்பிடக்கூடிய பீட்ரூட்டில் வைட்டமின்ஏ, வைட்டமின் பி1,வைட்டமின் பி2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள மாவுச்சத்துக்கள் கண்ணுக்கும் உடலுக்கும் அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்ரூட் ஜூஸ் தயாரிக்கும்போது அதோடு இஞ்சி சிறிதளவு சேர்த்து தயாரித்தால் அது சுவையாக இருக்கும்.

பீட்ரூட் பரோட்டா:

ஆலு பராத்தா செய்வது போலதான் இந்த ரெசிபியும். பல்வேறு ஊட்டத்துக்கள் நிறைந்த பீட்ரூட் பரோட்டா செய்து  காலை உணவைச்சாப்பிடலாம். உருளைக்கிழங்கிற்கு பதிலாக பீட்ரூட், பனீர், காலிஃப்ளவர், பராக்கோலி உள்ளிட்டவற்றை சேர்த்து பராத்தா செய்து சாப்பிடலாம்.

தென் இந்திய உணவு என்றால் இட்லி, தோசை, இடியாப்பம் அப்புறம் தோசைகளில் வெரைட்டி தான் பேமஸ். அந்த வெரைட்டி தோசைகளில் ஒன்றுதான் ஊத்தப்பம். ஊத்தாப்பம் என்றவுடனே வடிவேலு காமெடி நினைவுக்கு வராமல் இருக்காது. அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று சர்வர் சொல்லும் அந்தக் காட்சியில் வரும் ஊத்தாப்பம் ஒரு ரகம் என்றால் ப்ளைன் ஊத்தாப்பம், ஆனியன் ஊத்தாப்பம், கேரட் ஊத்தாப்பம், பீட்ரூட் ஊத்தாப்பம் என பல வெரைட்டி உண்டு. பீட்ரூட் ஊத்தாப்பம் -மேலும் வாசிக்க..

பீட்ரூட் நன்மைகள்:

  • பீட்ரூட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
  • இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
  • பீட்ரூட் எடை குறைக்க உதவுகிறது
  • பொட்டாசியம் அளவை பராமரிக்க உதவுகிறது
  • பீட்ரூட் உடல் முழுவதும் அழற்சியை (Inflammation) எதிர்த்துப் போராடுகிறது
  • இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

Published at : 25 Feb 2024 02:10 PM (IST) Tags: @food Healthy Snacking Beetroot Beetroot pachadi

தொடர்புடைய செய்திகள்

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

டாப் நியூஸ்

Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!

Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!

Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!

Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!

Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்

Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்