Aval Vadai : ட்ரெண்டாகும் அவல் வடை ரெசிப்பி.. இதோ இதை ட்ரை பண்ணிப் பாருங்க..
அவலை வித்யாசமான முறையில் சமைத்து கொடுக்கலாம். அவலில் வடை செய்து கொடுத்தால் அதன் சுவை குழந்தைகளை மேலும் சாப்பிட தூண்டும். அவள் வடை செய்ய வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களே போதும்
விடுமுறையில் வீட்டில் இருந்தால் ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும். மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து தருவது என்ற குழப்பம் ஏற்படலாம். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், சுவையாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த உணவை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுதான் அவல் வடை.
சிகப்பு அவல் மிகவும் நல்லது என்பார்கள். சிகப்பு அவலில் நார்ச்சத்து, விட்டமின் பி, கால்சியம், ஜிங்க் மற்றும் இரும்பு சத்துகள் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. வெள்ளை அவலில் குறைந்த அளவு கொழுப்பும், புரதமும் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பாலுடன் அவல் சேர்த்து தரலாம். ஒருசில குழந்தைகள் அவல் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு அவலை வித்யாசமான முறையில் சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அவலில் வடை செய்து கொடுத்தால் அதன் சுவை குழந்தைகளை மேலும் சாப்பிட தூண்டும். அவள் வடை செய்ய வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களே போதும்.
அவல் வடை செய்ய தேவையான பொருட்கள்
அவல்- ஒரு கப், அரிசி மாவு - அரை கப், கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, சீரகம் - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி -தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு
அவல் வடை செய்முறை
அவல் வடை செய்வதற்கு முதலில் அவலை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்து கொண்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். சிகப்பு அரிசி போன்ற தடிமனாக அவலாக இருந்தால் அரை மணி நேரம் ஊற வைக்கலாம். பிறகு தண்ணீரை வடிக்கட்டி அவலை நன்றாக பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். அவளில் தண்ணீர் இருந்தால் வடை சுடும்போது, அதிகளவில் எண்ணெய்யை ஈர்த்து கொள்ளும்.
ஊறவைத்து எடுத்து கொண்ட அவளுடன், அரிசி மாவு மற்றும் கடலை மாவை சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த ஒரு பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன், அரை டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய சிறு துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மொத்ததையும் பிசைந்து கொள்ள வேண்டும். மசால் வடைக்கு கலவை போன்று அனைத்து பொருட்களையும் பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காயவிட வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு அடுப்பின் சூட்டை குறைத்துக்கொண்டு, அவல் மாவு கலவையை சிறு உருண்டையாக கையில் பிடித்து, அதை தட்டையாக தட்டி எண்ணெயில் போட வேண்டும். இரண்டு பிறகும் திருப்பி விட்டு செந்நிறமாக வடையை பொறித்து எடுக்க வேண்டும். உடனே அவல் வடை ரெடியாகி விட்டது.
அவல் வடைக்கு தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த உணவை மாலைநேர ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். அவர்களின் உடலுக்கு ஆரோக்கியமான உணவாக இது இருக்கும்.
இந்த வடையை சிகப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, வெள்ளை சோள அவல், கேழ்வரகு அவல், கோதுமை அவல், கம்பு அவல், வரகு அவல், குதிரைவாலி அவல்களில் செய்து சாப்பிடலாம்.
அவலின் நன்மைகள்
அவல் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ரத்த சிகப்பணுக்களை அதிகரிக்க செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு அவல் நல்ல உணவாகும்.