மேலும் அறிய

Healthy Eating: டயட் முக்கியமில்லை; மகிழ்ச்சியாக சாப்பிடுங்க! நிபுணர்கள் சொல்லும் க்யூட் அட்வைஸ்!

Healthy Eating: உங்கள் மனதையும் உடலையும் நன்றாக அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்

நம் எல்லாருக்குமே’ நல்லா ருசியாக சாப்பிடனும், ஆனால் உடல் எடையும் அதிகரிக்க கூடாது’ -ங்கிற ஆசை இருக்கும். பெரும்பாலும் உடல் எடை குறைக்க அல்லது கட்டுக்குள் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுவது ‘டயட்’. சிலருக்கு இந்த வார்த்தையை கேட்டாலே ஆங்சைட்டி ஏற்படும் அளவிற்கு இருக்கும். ஏனெனில், அவங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடமாக இருக்கிறது சிரமமான விசயமாக இருக்கும். கடுமையான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், உடல் எடை குறைப்பது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடக்கூடிய பயணம். ஒருவருக்கு ஏற்றதாக உள்ளது மற்றவருக்கு பலனளிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் உடலின் நிலையை அறிந்துகொள்வது, நிபுணர்களை அணுகி பரிந்துரைகளை பெறுவது நல்லது என்று கூறப்படுகிறது.

ஆரோக்கியத்திற்கு டயட் அவசியமா?

90-களிம் இறுதியில் Evelyn Tribole மற்றும் Elyse Resch என்ற இருவர் ஆராய்ச்சியின் மூலம் புதிய ஒன்றை முன்வைதனர். அதாவது உடல் எடையை கட்டுக்குள் வைக்க டயட் என்பது மட்டும் முக்கியமனாது இல்லை. வேறு வழிகளும் இப்பதாக கூறினர். 2012-ல் இருவரின் புத்தகம் வெளியானது. "Intuitive Eating: A Revolutionary Program that Works." - இந்த புத்தகத்தில் ஒருவர் தங்களுக்கு விரும்பிய உணவுகளை சாப்பிடலாம். அதேவேளையில் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை தவிர்த்து டயட் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. இது ஆங்கிலத்தில் "intuitive eating" என்றழைக்கப்படுகிறது. National Eating Disorders Association இந்த முறையை சரியானது என பரிந்துரைக்கிறது. 

இந்த முறையில் டயட் கலாச்சாரத்தில் பங்கெடுக்காமல் உடல், உணவின் மீதுள்ள உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றபடி ஒரு வாழ்க்கைமுறையை பின்பற்றுவதாகும். 

Healthy Eating: டயட் முக்கியமில்லை; மகிழ்ச்சியாக சாப்பிடுங்க!  நிபுணர்கள் சொல்லும் க்யூட் அட்வைஸ்!

’டயட்’-டில் அதிக கவனம் வேண்டாமே

இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் ‘டயட்’ என்பது குறித்து பேசுவதை காணலாம். பிடித்த உணவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு சிலவற்றை சாப்பிட முயற்சி செய்வதுண்டு. இந்த முறையில் அப்படியில்லை. அதாவது, நெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர்; அது மிகவும் பிடித்ததாகவே இருந்தாலும்.. இருந்தாலும் அளவோடு வெண்ணேய் உணவில் சேர்த்துகொள்வது உடலுக்கு நல்லது மட்டுமே. கவலையோடு டயட் முறையை பின்பற்ற வேண்டும் என்பதில்லை..

’பசி’ உணர்வுக்கு மரியாதை 

பசி ஏற்படும் சாப்பிட்டு விடுங்க.. அதை புறக்கணிக்க வேண்டும் என்றில்லை. ’கொஞ்ச நேரம் முன்னதானே சாப்பிட்டோம். அதுக்குள்ள எதாச்சும் சாப்பிட வேண்டும் போல இருக்கே’-ன்னு தோணும்போது உங்கள் உடல் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.. ஏற்கனவே சாப்பிட்டதில் குறைவான ஊட்டச்சத்துகள் இருந்திருக்கலாம். உடலுக்கு எனர்ஜி போதுமான அளவு கிடைக்கவில்லை என்று பொருள். எனவே, பசிக்கும்போது தண்ணீர், ஜூஸ் என எதாவது அருந்தலாம். நேரத்து சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிட நேரமாகிவிட்டால் நட்ஸ், பழங்கள் என ஏதாவது சாப்பிடலாம். நொறுக் நொறுக் என திங்க வேண்டும் போல இருந்தால் பாப் கார்ன், மக்கானா, வீட்டிலேயே செய்த முறுக்கு, மிக்சர் கடையில் வாங்கியது என்றாலும் அளவாக எடுத்துகொள்ளலாம். 

உணவோடு போராடாதீர்கள்

சில உணவுகள் உங்களுக்கு பிடிக்கும் என்றாலும் அதை தவிர்க்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம்.அதனால் மனசோர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வெள்ளை சோறு பிடிக்கும் எனில் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றில்லை. வெள்ளை சோறு சாப்பிடுவதை மகிழ்ச்சியோடு தவிர்ப்பவர்கள் தாரளமாக அதை பின்பற்றலாம். ஆனால், வெள்ளைச் சோறு விரும்பி சாப்பிடுபவர்கள் அதை அளவோடு சாப்பிடலாம். அப்போதுதான் ‘அய்யோ என்னால சாப்பிட முடியலையே’ -ங்கிற உணர்விலிருந்து விடுபட முடியும். 

Healthy Eating: டயட் முக்கியமில்லை; மகிழ்ச்சியாக சாப்பிடுங்க!  நிபுணர்கள் சொல்லும் க்யூட் அட்வைஸ்!

’நல்லது’, ’கெட்டது’ -ன்னு ஒன்னுமில்லை

’அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்துகிறது ’Intuitive eating'என்ற முறை. இதன்படி, எந்த உணவையும் நல்லது, கெட்டது என்றெல்லாம் வரையறுக்க வேண்டியதில்லை. உணவின் அளவு மட்டுமே முக்கியம். எந்த உணவை சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். 

சாக்லெட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல்நலனுக்கு கேடு. டய்ட் என்பதற்காக சாக்லெட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றில்லை.

திருப்தி உணர்வு

எந்தவொரு உணவையும் சாப்பிட்டு முடித்தவுடன் திருப்தியான உணர்வு ஏற்பட வேண்டும். மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும்.  பானி பூரி போன்ற துரித உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் எப்போதாவது ஒருமுறை சாப்பிடலாம். தஹி பூரி சாப்பிடலாம். ஆனால், அடிக்கடி சாப்பிட கூடாது. 

அறிதல்

உணவை பொறுத்தவரையில் ’ பிரியாணி’ என்றதுமே நன் கண்முன் அது வரும். ருசியை கற்பனையில் கூட உணர முடியும். அப்படியிருக்கையில், சாப்பிடும்போது வேறு எதையும் பற்றி சிந்திக்காமல் இருப்பது நல்லது. சுவைத்து சாப்பிட வேண்டும். தட்டில் உள்ளதை காலி செய்ய வேண்டும் என்ற உணர்வோடு சாப்பிடாமல், ருசித்து சாப்பிட வேண்டும். 

உணவும் மனமும்

மனச்சோர்வு, மன அழுத்தம் என இருந்தால் அதற்கு தீர்வு எதையாது சாப்பிடுவது அல்ல. ’மனசு சரியில்லையா சாப்டா சரியாகிடும்’-ங்கிற வசனங்கள் மிகவும் சரியானது அல்ல.  அந்த நேரத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அப்போது சர்க்கரை அதிகமாக இருக்கும் இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் தோன்றினால் இயற்கையாக சர்க்கரை இருக்கும் பழங்கள்,உலர் திராட்சை சாப்பிடலாம். 

சாக்லெட் ரொம்ப பிடிக்கும் என்றால் வாரத்திற்கு 2 முறை டார்க் சாக்லேட் சாப்பிடலாம் என்று வரையறுக்கலாம். மகிழ்வோடு சாப்பிடுவது என்பது அவசியம். 

உடலுக்கு மரியாதை

உடல் தோற்றம் குறித்த குற்றவுணர்வு இருக்க வேண்டும் என்பதில்லை. உடல் குறித்த புரிதல் வேண்டும் என்றில்லை. மெலிந்த, பருமனான உடல் தோற்றம் எதுவாக இருந்தாலும் நீங்க நினைத்தது போல் இருக்க வேண்டும் என்றில்லை. உயரத்திற்கு ஏற்ற எடை இருப்பது போதுமானது. சைஸ் ஜீரோ போன்றெல்லாம் இருக்க வேண்டும் என்பதில்லை. 

உங்களை அறிதல்

உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்கவும். எல்லாமே எல்லாருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு ஜாகிங்கை விட நடைப்பயிற்சி செய்ய பிடித்திருக்கிறது என்றால் அதையே பின்பற்றலாம். வலிந்து எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆரோக்கியம் பிரதானம்

உங்கள் மனதையும் உடலையும் நன்றாக அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். சாப்பிடும்போது மகிழ்ச்சியாக உணந்து சாப்பிட வேண்டும். 

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.