டெல்லி மெட்ரோ ரயிலில் சரமாரியாக அடித்துக் கொண்ட இளைஞரும் இளம்பெண்ணும் - வைரல் வீடியோ
டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரும் இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரும் இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்தப் பெண் பிரபலமான ஜாரா பிராண்ட் டிஷர்ட்டை கையில் வைத்துள்ளார். அதன் விலை தொடர்பாக எழுந்த சர்ச்சையே இருவருக்கும் ஏற்பட்ட தகராறுக்கு காரணம் என்பது அவர்களின் உரையாடல் மூலம் தெரிய வருகிறது. இருவரும் படித்தவர்கள் போல் இருக்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் அநாகரிகமாக தாக்கிக் கொள்கிறார்கள்.
கல்வி ஒருவரை பண்படுத்த வேண்டும். கல்வி என்பது வெறும் ஏட்டுப்பாடம் அல்ல. நம் ஐம்புலன்களையும் அடக்கி ஆழ நாம் சிந்தனையை சீர்படுத்த உதவுவதே கல்வி.
ஆனால் இங்கே இந்த இரண்டு இளைஞர்களும் நடந்து கொள்ளும் விதம் இவர்கள் கற்றவர்கள் தானா என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது. ரயிலில் இருந்தவர்களும் இதில் தலையிடவில்லை. அனைவரும் சம்பவத்தை வேடிக்கை பார்க்கின்றனர். அப்படி வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
வீடியோ குறித்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கருத்து ஏதும் சொல்லவில்லை.
View this post on Instagram
கோபத்துக்கு கடிவாலம் கட்டலாமே!
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். ஆம், கோபம் அறிவை பாதிக்கும். கோபம் உடல்நலனை பாதிக்கக் கூடியது, கோபம் ஒருவரின் நடத்தையை பாதிக்கக் கூடியது. எப்போது கோபம் வருகிறதோ, அப்போது ரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்குச் செல்லும் ரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இ ரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலைவலியை உண்டாக்கும். அதிகமாக கோபம் வருவதால், மன அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக நீரிழிவு, மன இறுக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் வரும். கோபம் வரும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் தூக்கமின்மை ஏற்படும். தூக்கமின்மை பல நோய்களையும் வரவேற்கும்.
கோபத்தை குறைக்க என்ன செய்யலாம்?
கோபத்தின் முக்கிய காரணம் நாம் கொள்ளும் வெறுப்பு. வெறுப்பைக் கைவிடுங்கள். அனைவரையும் அன்போடு அனுகுங்கள். கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை நிதானமாக சிந்தியுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள். பதறிய காரியம் சிதறும். பதற்றத்தைக் கைவிடுங்கள். பொறுமையாக இருங்கள். நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த தியானம், மூச்சு பயிற்சி, யோகா போன்றவற்றை கடைப்பிடிக்கலாம்.
இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எதற்கும் பொறுமை இல்லை, எதிலும் நிதானமில்லை. பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான் இருக்கின்றனர். சிறு ஏமாற்றம், தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குத் தான் பெற்றோர்கள் அவர்களை வளர்த்தெடுக்கின்றனர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.