இளநரையால் வருத்தமா? கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான உணவுமுறைகள்!
இன்றைய இளைஞர்கள் மாடர்ன் கலாச்சாரம் என்கிற பேரில் தலைமுடிக்கு கலரிங் அடிப்பது இன்றைய டிரெண்டாகியுள்ளது. இதுப்போன்ற காரணங்களாலும் இளைஞர்கள் பலருக்கு தலைமுடி வெள்ளையாகுவது இளம் வயதிலேயே ஏற்படுகிறது.
இளைஞர்கள் பலரும் சந்திக்கக்கூடிய இளநரைக்கு ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றினால் கட்டாயம் இதனைத் தடுக்க முடியும் எனக்கூறப்படுகிறது.
இன்றைய வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்களிடம் பல கலாச்சார மாற்றங்களும் ஏற்படுகிறது. குறிப்பாக ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்ட இடத்தில் தற்போது பாஸ்புட் என்கிற பேரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை நாம் உட்கொள்கிறோம். இதனால் நம்மை அறியாமலே உடலில் வைட்டமின் பி 12, ஜிங்க், செலினியம், தாமிரம் மற்றும் வைட்டமின் டி போன்ற பல சத்துக்கள் குறைவாகின்றது. இதனால் பல உடல் நலப்பிரச்சனைகள், இளநரை போன்றவற்றினால் நாம் பாதிப்புக்கு உள்ளாகிறோம்.
மேலும் இன்றைய இளைஞர்கள் மாடர்ன் கலாச்சாரம் என்கிற பேரில் தலைமுடிக்கு கலரிங் அடிப்பது இன்றைய டிரெண்டாகியுள்ளது. இதுப்போன்ற காரணங்களாலும் இளைஞர்கள் பலருக்கு தலைமுடி வெள்ளையாகுவது இளம் வயதிலேயே ஏற்படுகிறது. எனவே இதனைத்தடுப்பதற்கு ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றலாம் எனக் கூறப்படும் வேளையில் அப்படி என்னென்ன உணவு முறைகள் என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக்கொள்வோம்.
கடற்பாசி: இதனை நம்முடைய உணவு முறைகளில் சேர்க்கும் போது ஜிங்க், மெக்னீசியம், செலினியம், தாமிரம், இரும்பு உள்பட அனைத்து தாதுக்களும் கிடைக்கப்பெறுகின்றது.
புற்கள் : கல்லீரலைச்சுத்தப்படுத்த கோதுமை புல் அல்லது பார்லி புல் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
கிழங்கு வகைகள்: புரதம் நிறைந்த சக்கரவல்லி கிழங்கு, கேரட், பூண்டு, ப்ரோக்கோலி போன்றவை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் அதிகளவில் உள்ளதால் தலைமுடிக்கு ஆரோக்கியமான ஊட்டசத்துக்களை வழங்குகிறது. இதோடு மட்டுமின்றி சிறு வயதில் ஏறபடக்கூடிய நரை முடியைத்தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் அனைத்து வகை காய்கறிகள், இயற்கையில் விளைவிக்கப்பட்ட சிறு தானியங்கள் போன்றவை தினமும் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பெரிய நெல்லிக்காய் : ஆம்லா அல்லது பெரிய நெல்லிக்காயை தினமும் அப்படியோ அல்லது சாறு எடுத்துப் பருகும் போது வைட்டமின்கள் நமக்கு கிடைக்கின்றது.
இதுமட்டும் இல்லாமல் சர்க்கரை, பால் பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட மாவு, பேக்கேஜ் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், அதிகப்படியான விலங்கு புரதம் போன்றவற்றைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
மேற்கண்ட உணவு முறைகளை நம்முடைய வாழ்வில் தினமும் நடைமுறைப்படுத்தினால் நல்ல ஆரோக்கியத்தோடு மட்டுமில்லாமல் இளநரை, முடி உதிர்தல் போன்ற எந்தப் பிரச்சனைகளையும் இளம் வயதிலேயே ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியும். எனவே இனிமேலாவது ஆரோக்கியமான உணவு முறைகளை உட்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்..