(Source: ECI/ABP News/ABP Majha)
தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மைகளா? இதெல்லாம் நம்பிக்கைகள்..
கழுத்தில் தங்க நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் இரத்த ஓட்டத்தைச் சீராக்க வைத்திருக்க உதவுகின்றது. மேலும் நமக்கு எப்போதுமே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கிறது.
நம் முன்னோர்கள் ஒரு துண்டு மூக்குத்தியாவது பெண்கள் தங்கத்துல போட்டு இருக்கனும்னு சொல்லிருப்பாங்க. பலருக்கு ஏன்னு தெரியாது ஆனாலும் அதற்கேற்றால் போல் தான் நாமும் புதிது புதிதாக வரும் மாடல்களில் தங்க நகைகளை வாங்கி அணிந்து வருகிறோம். எனவே இந்நேரத்தில் தங்க நகைகளை அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
தங்க நகைகள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்:
பெண்களோ அல்லது ஆண்களோ யார் தங்க நகைகள் அணிந்தாலும் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகள் தூண்டப்பட்டு, ஒவ்வொரு உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றது என்பதை நம் முன்னோர்களிடையே பழங்காலம் தொட்டு வழக்கத்தில் உள்ளது. அதிலும் கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் இரத்த ஓட்டத்தைச் சீராக்க வைத்திருக்க உதவுகின்றது. மேலும் நமக்கு எப்போதுமே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கிறது என நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்புடன் இருக்கும் தங்கநகைகள் தற்போது பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்ற சூழலில் அதுபற்றியும் இங்கே சற்று தெரிந்துகொள்வோம்.
கண்டசரம் : வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணியும் ஒரு வகை நெக்லஸ்.
நெக்லஸ் : இவை முழுவதும் தங்கம் மற்றும் முத்து,பவளம், வைரம் , பிளாட்டி போன்ற பல வகைகளில் கிடைக்கின்றது. இதில் அனைத்து வயதினரும் அணியும் வகையில் விதவிதமான மாடல்களில் கிடைக்கின்றது. மேலும் கற்கள் பதித்த நெக்லஸின் அடிப்புறம் கற்களை மூடியவாறு வருபவை க்ளோஸ்டு என்று அழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் அதிக எடைக்கொண்ட நெக்லஸ் வகைகள் தான் இருக்கும். ஆனால் இப்போது குறைந்த தங்கத்தில் அதிக டிசைன்களில் இப்போது கிடைக்கின்றது. குறிப்பாக பெங்காலி மாடல், கேஸ்டிங் மாடல், கல்கத்தா மாடல். டர்கிஷ் மாடல் என பல வகைகளுடன் தற்போது விற்பனையாகிறது.
உட்கத்துச்சரடு: இது கழுத்தை ஒட்டி அணியும் ஷார்ட் செயின்களாகும். மிக மெல்லிய டிசைன்களில் கிடைப்பதால் இளவயது ஆண் மற்றும் பெண்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது.
பாரம்பரிய அட்டிகைகள் : கழுத்தை ஒட்டிவரும் இவ்வகை அட்டிகைகளில் பதக்கங்கள் கற்கள் வைத்தவையாகவே இருக்கும். ப்ளெயின் பதக்கங்கள் வைத்த அட்டிகைகள் குறைந்த அளவிலேயே அணியப்படுகின்றன. மேலும் பராம்பரிய அட்டிகைகள் மட்டுமில்லாமல் பேன்ஸி டிசைன்கள் மற்றும் குழந்தைகள் அணிவது போன்ற மாடல்களிலும் கிடைக்கிறது.
சோக்கர்கள்: இத்தகைய செயின்கள் வெஸ்டர்ன் கலாச்சாரம் என்றாலும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் தற்போது பல வகைகளில் கிடைக்கிறது. கழுத்தில் நெருக்கமாக அணியும் என்று இந்த வகை மாடல்கள் குந்தன், போல்கி மாடல்கள் மற்றும் முத்துக்கள் பதித்தும் கிடைக்கப்பெறுகின்றது. இவற்றை அணியும் பெண்களுக்கு ஆடம்பர தோற்றம் கிடைக்கின்றது. மேலும் இதனைப் பாரம்பரிய ஆடைகள் மட்டுமல்லாது வெஸ்டர்ன் உடைகளுக்கும் அணியலாம். தற்போது எடை குறைவாகவும் அதே நேரத்தில் பார்வையாகவும் சோக்கர்கள் கிடைப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. இதேப்போன்று மோதிரம், கைச்செயின், ஜிமிக்கி, பேன்சி கம்மல் என பல விதவிதமான டிசைன்களில் மக்களுக்குப் பிடித்தவாறு கிடைக்கின்றது.