Macadamia Nut Oil : சருமத்துக்கு பளபளப்பையும், பொலிவையும் தரும் மக்காடமியா விதை எண்ணெய்.. எப்படி பயன்படுத்தலாம்?
மக்காடமியா விதைகளின் எண்ணெயை சருமத்தின் வயதான தோற்றத்தை தரும் சரும சுருக்கங்களை சரி செய்து தோற்ற பொலிவை தருகிறது
குயின்ஸ்லாந்து நட்டு , புஷ் நட் , மரூச்சி நட் , பாப்பிள் நட் மற்றும் ஹவாய் நட் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மக்காடமியா விதைகளானது பூக்கும் தாவர வகையைச் வகையைச் சார்ந்ததாகும்.
சரும பராமரிப்பு மற்றும் அழகு சாதனங்களில் மக்காடமியா விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மக்காடமியா விதைகளின் எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தின் வயதான தோற்றத்தை தரும் சரும சுருக்கங்களை சரி செய்து தோற்ற பொலிவை தருகிறது. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
எண்ணெயில் ஒமேகா-6 லினோலிக் அமிலம் உள்ளது, இது எண்ணெய் சருமம் உள்ளவர்களில் சரும உற்பத்தியை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் இயற்கையான பாதுகாப்பு தடையை உருவாக்குகிறது. வயதானவர்களுக்கு சருமத்தின் அளவு குறைவதால், இது சுருக்க எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது.
மக்காடமியா விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..
மக்காடமியா விதை எண்ணெயில் ஒமேகா-6 லினோலிக் அமிலம் உள்ளது.எண்ணெய் சருமம் உள்ளவர்களில் உற்பத்தியாகும் எண்ணெயை சமன்படுத்துவதில் இது நன்கு செயலாற்றுகிறது. மேலும் சருமத்தில் இயற்கையான,பாதுகாப்பு தடையை உருவாக்குகிறது. வயது ஆகாத சருமத்தில் சுருக்கங்கள் விழுகிறது இத்தகைய சுருக்கங்களை தவிர்ப்பதில் மக்காடாமியா விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் சிறப்பாக செயலாற்றுகிறது.
மக்காடமியா எண்ணெயில் உள்ள ஒமேகா 7 எனப்படும் பால்மிடோலிக் அமிலம் உள்ளது. இது தீக்காயங்கள், கீறல்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது. மக்காடமியா எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதனால் சருமத்தில் புதிய செல்கள் உருவாகி சருமத்தின் பளபளப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது.
புதிய செல்களை உற்பத்தி செய்ய செய்ய உதவும் ஸ்குவாலீன் மற்றும் ஓலிக் அமிலம், மக்காடாமியா எண்ணெயில் உள்ளது. இது வறண்ட அல்லது வெடித்த சருமத்துடன் வினை புரிந்து தோலினை, ஈரப்பதம் நிறைந்த தன்மையுடன் மென்மையாக மாற்றுகிறது.
மக்காடமியா விதை எண்ணெயில் பால்மிடிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் உள்ளது. இத்தகைய அமிலங்கள் நமது சருமத்தில் இயற்கையாகவே உள்ளது. வயதானவுடன் சருமத்தில் பால்மிடிக் அமிலத்தின் அளவு குறைகிறது. மக்காடமியா எண்ணெயைப் பயன்படுத்துவது பால்மிடிக் அமிலத்தின் அளவை சமையல் செய்ய உதவுகிறது. மக்காடமியா விதை எண்ணெய்,சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
மக்காடமியா எண்ணெய் மிகவும் இலகுவானதும் மற்றும் உறிஞ்சக்கூடிய தன்மையுடன் இருப்பதாகும். குறைந்த சரும செல்களை உற்பத்தி செய்யும் முதிர்ந்த மற்றும் வறண்ட சரும வகைகளில்,இது நன்றாக செயல்படுகிறது.மேலும் சருமத்தின் மேற்புறம் ஏற்படும் தடிப்பு மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மக்காடமியா விதை எண்ணெய் பரவல், உயவு மற்றும் ஊடுருவல் குணங்களைக் கொண்டுள்ளது, இது ஒரு மென்மையான பின்விளைவுகள் இல்லா தன்மையுடையது.இது லேசான சன்ஸ்கிரீனாகவும் செயல்படுகிறது.
புரதம், கார்போஹைட்ரேட்டுகள்,நார் சத்துக்கள்,வைட்டமின் வகை A, E, B மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் செலினியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது எனவே இந்த விதையிலிருந்து பெறப்படும் எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்ட பலன்களை பெறலாம்