Job Alert: பல் மருத்துவரா நீங்கள்? ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆஃபர் - முழு விவரம்
Job Alert: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவர் பணியிட வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட இருக்கும் பல் மருத்துவ மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
பல் மருத்துவர் (Dental Surgeon)
பல்மருத்துவ உதவியாளர் (Dental Assistant)
திட்ட/ நிர்வாக உதவியாளர்
கல்வித் தகுதி
பல் மருத்துவர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
திட்ட /நிர்வாக உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
திட்ட / நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி ஆவணங்களுடன் நேரிலொ / விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மின்னல் முகவரி - vnrnhm@gmail.com
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி -
நிர்வாக செயலாளர்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
விருதுநகர் - 626 6001
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.09.2023
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய, கூடுதல் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/09/2023091729.pdf- என்ற இணைப்பை கிளிக் செய்து காணவும்.
****
டெல்லி காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
கான்ஸ்டபிள் (ஆண், பெண்)
பெண்கள் -2,491
மொத்த பணியிடங்கள் - 7547
எப்படி விண்ணபிப்பது?
https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; LMV பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 படி 18 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும். - SSC Constable Post’, Apply என்பதை கிளிக் செய்யவும்
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
- புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
முழு விவரம் அறிய
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_CEDP2023_01092023.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2023