ஆதார் நிறுவனத்தில் வேலை.. இன்றே கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.
ஆதார் நிறுவனத்தில் துணை இயக்குனர், தனி செயலாளர் என 23 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் அதாவது நவம்பர் 26க்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
ஆதார் அடையாள அட்டை என்பது மக்களின் தவிர்க்க முடியாத ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது.. குறிப்பாக இந்த டிஜிட்டல் இந்தியாவில், ஒருவர் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற வேண்டும் என்றாலும் ஆதார் எண் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதாரின் முதல் நோக்கமாக உள்ளது. இதன் காரணமாக தான் சிறு வயது முதல் பெரியவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி தீவிரமாக தற்போதும் நடைபெற்றுவருகிறது.
UIDAI ன் கீழ் பலர் ஆதார் தொடர்பான பணிகளில் நாடு முழுவதும் பணியாற்றி வரும் நிலையில் தற்போது Dy director, section officer மற்றும் இதர பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை என்ன? என்பது குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.
ஆதார் நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்
காலிப்பணியிடங்கள் : 23
தகுதி : மத்திய, மாநில, பொதுத்துறை மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறை நிறுவனங்களில் பணியாற்றிவராக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு : ஆதார் நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Offline மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு முன்னதாக இப்பணியிடங்களுக்கான அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும்.
பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்தில் பணியிட அறிவிப்பு தொடர்பான அறிவிப்பினைப்படித்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் இப்பணிக்கான கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் உடன் இணைத்து விண்ணப்பங்களை ஆப்லைன் மூலம் நாளைக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Assistant Director General (HR),
Unique Identification Authority of India Government of India (GoI),
Bangla Sahib Road,
Behind Kali Mandir, Gole Market,
New Delhi – 110001
முன்னதாக விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://uidai.gov.in/images/Vacancy_Circular_dt_11_10_2021.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.