UIDAI Recruitment 2024:எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!விவரம் இதோ!
UIDAI Recruitment 2024: ஆதார் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களை அறியலாம்.
இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணைய (The Unique Identification Authority of India (UIDAI)) அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Assistant Section Officer (ASO)
Assistant Account Officer (AAO)
கல்வித் தகுதி:
- இது Deputation அடிப்படையிலான பணி என்பதால் சம்பந்தப்பட்ட துறையில் மத்திய அரசு பணியில் Pay Matrix Level 5,3,4, என்ற நிலைகளில் மாத ஊதியம் பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நிர்வாகம் சார்ந்த பணிகள் செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
- Assistant Account Officer பணியிடத்திற்கு Chartered Accountants/Cost Accountants/MBA (Finance) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் .
- இந்தப் பணிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் நல்லது.
- கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Assistant Section Officer - Pay Matrix Level-6 of the 7th Central Pay Commission (Rs. 35,400 - Rs. 1,12,400)
Assistant Account Officer - Pay Matrix Level-8 of the 7th Central Pay Commission (Rs. 47,600 – Rs. 1,51,100)
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களை கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.05.2024
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Director (HR),
Unique Identification Authority of India (UIDAI),
Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange,
GD Somani Marg,
Cuffe Parade, Colaba,
Mumbai - 400 005
இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
VOC Port Trust Recruitment 2024:பொறியியல் பட்டம் பெற்றவரா?ரூ.1 லட்சம் மாத ஊதியம் - முழு விவரம்!
TN MRB Recruitment:2,553 பணியிடங்கள்;எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிங்க!