பட்டதாரிகளா? 20,000 ரூபாயில் தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்க ஜனவரி 4 கடைசி தேதி..
தனியார் நிறுவனம், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்,அவர்களுக்கு உதவும் வகையில், “ஓன் ஸ்டாப் சென்டர்“ ஒன்று தொடங்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் வருகின்ற ஜனவரி 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதனைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனம், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உதவும் வகையில், “ஓன் ஸ்டாப் சென்டர்“ ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உதவிக்கேட்டு வரும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குதற்கு ஆலோசகர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே சமூக பணியியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதிகள் தேவை? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
சமூக நலத்துறை பணியிடங்களுக்கான விபரங்கள்
பணியிடம்- திருநெல்வேலி சமூக நலத்துறை
காலிப்பணியிடங்களின் விபரங்கள்
மூத்த ஆலோசகர் – 1
வழக்கு பணியாளர் – 4
பல்நோக்கு உதவியாளர் – 2
இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் – 1 என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.
இதோடு சமூக பணியியல் துறையில் இளநிலை, முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள் மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைத்தால், https://tirunelveli.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சுய விபரங்கள், கல்வித்தகுதி அனைத்தையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பி4/107, சுப்பிரமணியம் தெரு,
வ.உ.சி மைதானம் எதிரில்,
திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை
திருநெல்வேலி – 627 002.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும், அதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம் :
மூத்த ஆலோகர் – மாதம் ரூ.20,000/-
வழக்கு பணியாளர் – மாதம் ரூ. 15,000/-
பல்நோக்கு உதவியாளர் – மாதம் ரூ. 6,400/-
இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் – ரூ.10,000/-
மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்