மத்திய அமைச்சகங்களில் மொழிபெயர்ப்பாளர் பணி; ரூ.1.42 லட்சம் மாத ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி?
SSC Recruitment 2023: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் காலியாக உள்ள ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்பாளர், சீனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி (Secretariat Official Language Service CSOLS)
- ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி (Armed Forces Headquaters)
- ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர்
- சீனியர் இந்தி மொழிபெயர்பாளர்
மொத்த பணியிடங்கள் - 307
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரில் இருந்து பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மொழிப் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது வேண்டும்.
ஊதிய விவரம்
- ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி (Secretariat Official Language Service CSOLS) - ரூ.35,400 - ரூ.1,12,400
- ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி (Armed Forces Headquaters) - ரூ.35,400 - ரூ.1,12,400
- ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.35,400 - ரூ.1,12,400
- சீனியர் இந்தி மொழிபெயர்பாளர் - ரூ.44,900 - 1,42,400
வயது வரம்பு :
விண்ணப்பிக்க 01.08.2023 அன்று 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணபிப்பது?
https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும். - SSC ’Junior Translator’ Apply என்பதை கிளிக் செய்யவும்
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
- புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறனறிவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
பாடத்திட்டம்
திறனறிவு தேர்வு:
இதில் கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பாக 200 மதிப்பெண்ணிற்கு தேர்வு நடத்தப்படும்.
முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FINAL_NOTICE_JHT_2023_22082023.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :23.08.2023
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி- 12.09.2023 - இரவு 11 மணி வரை
ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 12.09.2023 - இரவு 11 மணி வரை
விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 13.09.2023 - 14.08.2023 இரவு 11 மணி வரை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - அக்டோபர், 2023
எழுத்துத் தேர்வு தேதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.