Job Alert: இந்திய தர கவுன்சிலில் 553 பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Job Alert: இந்திய தர கவுன்சிலில் பல்வேறு வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 553 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
பணி விவரம்
- பயோ டெக்னாலஜி - 50
- பயோ கெமிஸ்ட்ரி - 20
- உணவு தொழில்நுட்பம் - 15
- வேதியியல் - 56
- பாலிமர் சயின்ஸ் - 9
- பயோ மெடிக்கல் - 53
- எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 108
- எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் - 29
- கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி - 69 1
- இயற்பியல் - 30
- சிவில்- 9
- மெக்கானிக்கல் - 99
- உலோகவியல் - 4
- டெக்ஸ்டைல் - 8
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
4.8.2023 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.qcin.org- என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கு பொதுப்பிரிவினர் ரூ.1000 செய்ய வேண்டும். பழங்குடியினர் / பட்டியலின பிரிவினர், பெண்கள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://qcin.org/wp-content/uploads/2023/07/Recruitment-Notification_Final-_-30062023-1.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.