8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.50 ஆயிரம் சம்பளத்துடன் தமிழக புள்ளியியல் துறையில் வேலை!
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது சான்றிதழ் சரிப்பார்ப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாநில வருமான மதிப்பீடுகள், பொருளாதாரக் கணக்கெடுப்பு, வேளாண் கணக்கெடுப்பு, சிறப்பு ஆய்வுகள் மற்றும் பொருளாதாரத்தின் மாதாந்திர அறிக்கைகள் உட்பட பொது மற்றும் தனியார் தரவு மூலங்களின் புள்ளி விவர தரவு சேகரிப்புத் தொகுத்தல் போன்ற பல்வேறு பணிகள் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழகத்தின் இத்துறையின் கீழ், ஆணையர், உதவியாளர், தட்டச்சர், போன்ற பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் 11 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்லைன் மூலமாக மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் அலுவலக உதவியாளர் ஆவதற்கான தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் -11
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் – ரூபாய் 15 ஆயிரத்து 700 முதல் 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் பணியாற்ற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையத்தில் டவுன்லோடு செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்,
எண்.259, அண்ணா சாலை,
டி.எம்.எஸ் வளாகம்,
சென்னை – 600006.
தேர்வு முறை:
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது சான்றிதழ் சரிப்பார்ப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விபரங்களை அறிய http://des.tn.gov.in அல்லது https://des.tn.gov.in/node/407 என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.