TNPL Recruitment: சிவில் இஞ்சினியரா நீங்கள்? ரூ.2.39 லட்சம் மாத ஊதியம் - TNPL நிறுவனத்தில் வேலை!
TNPL Recruitment : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கரூர் கிளையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) இருக்கும் வேலை வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இக்கட்டுரையில் தரிந்துகொள்ளலாம்.
டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்திற்கான தகுதிகள் என்னென்ன என்று கீழே காண்போம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 10 (2023)ஆம் தேதி கடைசி ஆகும்.
பணி விவரம்
துணை மேலாளர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க B.E. / B.Tech சிவில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது 26 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
விண்ணப்பதாரர்கள் 46 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி இடம்
கரூர்
ஊதிய விவரம்
இந்தபொ பணிக்கு மாத ஊதியமாக ரூ.2.39 லட்சம் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. திறன் அடிப்படையில் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpl.com/careers - என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சுய விவர குறிப்பு வடிவத்தின் படி அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 10/01/2023
அஞ்சல் முகவரி:
GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136,
KARUR DISTRICT, TAMIL NADU.
https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/12/TNPL_DGM-Civil-Advt-27122023.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்துட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (Indian Institute of Information Technology, Design and Manufacturing) பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி
ஆலோசகர்
கல்வித் தகுதி
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி பணிக்கு B.E./B.Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மனிதவள மேலாண்லை, மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஆலோசகர் பணிக்கு மத்திய அரசு பணி அல்லது ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி பணிக்கு மாத ஊதியமாக ரூ.75,000 வழங்கப்படும்.
ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdf3Q3edMUdsvaJVK3SGz8mQHsye4IX1NnyThPe1UPLCKyJ7g/closedform - என்ற கூகுள் ஃபாமில் தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 2024 ஜனவரி மாதம் 4-வது வாரத்தில் நேர்காணல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.01.2024
இந்திய வங்கியில் வேலை
நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் உள்ள காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கிகளில் பணிபுரிய காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. சென்னை நிர்வாகம் முடிவு செய்யும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த 1,ஜனவரி,2024 -ஆம் தேதி கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள..மேலும் வாசிக்க..