8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
இந்த அரசு வேலைவாய்ப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது! கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

8ம் வகுப்பு படித்திருந்தால் போதும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு உறுதி. இப்போ காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. அதோட முழு விபரமும் உள்ளே இருக்கு.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். எழுத்து தேர்வு இல்லை. நேர்காணல் மூலம் தேர்வு. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை. தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்காகக் கோரப்பட்டுள்ளது.
இந்த அரசு வேலைவாய்ப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது! கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசு வேலைகளில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ள இந்த இரண்டு பணிகளுக்கும் தேவையான அடிப்படை கல்வித் தகுதி மிகவும் எளிமையானது. அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இப்பணிக்கு மாதச் சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன. அதேபோல், ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
ஓட்டுநர் பதவிக்கு மாதச் சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் 02 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இருக்கு. இதற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற தகவல் தனிப்பட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். எனவே, எழுத்துத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய அவசியம் இல்லை என்பதால், வேலை கிடைக்கும் வாய்ப்பு சுலபமாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தை உடனே அனுப்பி விடுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், தங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித் தகுதி, சாதி, இருப்பிட முகவரி, பணி அனுபவம் போன்ற தனிப்பட்ட சுயவிவரங்களை தனித்தாளில் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இதனுடன் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இரண்டு அரசு பதிவு பெற்ற அலுவலர்களிடம் இருந்து சமீபத்திய தேதியில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றுகளையும் இணைக்க வேண்டும். இதற்கெனத் தனியான விண்ணப்பப் படிவங்கள் எதுவும் கிடையாது.
விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி வேறுபடுகிறது:
திருநெல்வேலி: 22.10.2025
கோயம்புத்தூர்: 23.10.2025
தஞ்சாவூர்: 14.11.2025
திருப்பத்தூர்: 23.10.2025
வேலூர்: 23.10.2025
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதால், உடனடியாக விண்ணப்பிப்பது விடுங்கள். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.





















