Temple Jobs: தென்காசி அருகே உள்ள கோயிலில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்
Temple Jobs: தென்காசி அருகே கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
தென்காசியில் உள்ள அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஓதுவார்
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
மாநில அரசு அங்கீகாரம் பெற்ற சமய நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் தேவாரம் பாடத்தில் மூன்றாண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் வல்லமை பெற்றிருக்க வேண்டும். இதற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.3000 வழங்கப்படும்.
வயது வரம்பு:
08.09.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 45 வயதிற்கு உட்ப்டட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாக திருக்கோயில் அலுவலகத்தில் வந்து கொடுக்கலாம்.
இந்த நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயில்,
வாசுதேவநல்லூர், சிவகிரி வட்டம்,
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.09.2023 மாலை 6 மணி வரை
****
அஞ்சல் துறையில் வேலை - 30,041 பணியிடங்கள்
இந்திய அஞ்சல் துறையில் 30,041 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்று அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு:
இந்தக் காலிபணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால் பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பணி விவரம்:
Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக்
மொத்த காலியிடங்கள்: 30,041 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் மட்டும் 2,994 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதிகள்:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.indianpost.gov.in / https://indiapostgdsonline.gov.in -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
இந்த லிங்க்கில் சென்று விண்ணப்பிக்கவும் https://www.appost.in/gdsonline/home.aspx.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08.2023
முழு அறிவிப்பிற்காக லிங்க- https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf
மண்டலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களுக்கு.. https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.