மேலும் அறிய

ஆசிரியரல்லாத குரூப் 'ஏ', 'பி' 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; வரும் 24ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி... முழு விபரங்கள் இங்கே!!!

நூலக அறிவியல், தகவல் அறிவியலில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வரும் 24ம் தேதி கடைசி நாள். முந்திக்கோங்க. தகுதியுள்ளவர்கள் வேலை வாய்ப்பை பெற்றிடுங்க. என்ன விஷயம் என்கிறீர்களா? சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியரல்லாத குரூப் 'ஏ', 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

குரூப் 'ஏ' பணியிடங்கள் விவரம்:

பணி: சீனியர் நூலகர்,  காலியிடம்: 1,  சம்பளம்: மாதம் ரூ.57,700 - 98,200

தகுதி: நூலக அறிவியல், தகவல் அறிவியலில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் துணை நூலகராக அல்லது கல்லூரி நூலகராக 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 25 - 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: சீனியர் டெக்னிக்கல் ஆபீசர் (புரொடக்ஷன் எக்சிகியூட்டிவ்), காலியிடம்: 1, சம்பளம்: மாதம் ரூ. 67,700 - 2,08,700, 

தகுதி: பொறியியல் துறையில் எம்.இ, எம்.டெக் முடித்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் ஆபீசர் (Editor),  காலியிடம்: 1,  சம்பளம்: மாதம் ரூ. 6,100 - 1,77,500

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் ஆபீசர் (Production Assistant).  காலியிடம்: 2, சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500,  

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

குரூப் 'பி' பணியிடங்கள் விவரம்:

பணி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் Gr. I (Cameraman), காலியிடம்: 1, சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஒளிப்பதிவில் பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் ஸ்டில் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற தொடர்புடைய துறையில் 3 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஒளிப்பதிவு , திரைப்படத் தயாரிப்பு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில், கல்வி தொலைக்காட்சி தயாரிப்பு, ஊடக நிறுவனங்கள், தயாரிப்பு பிரிவு போன்றவற்றில் திரைப்படத் தயாரிப்பில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டில்,திரைப்பட கேமராக்களைக் கையாளும் திறன்கள் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

குரூப் 'சி' பணியிடங்கள் விவரம்:

பணி: அசிஸ்டெண்ட் செக்சன் ஆபீசர் (Hindi Translator).  காலியிடம்: 1,  சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300,  தகுதி: ஆங்கில பாடத்துடன் கூடிய ஹிந்தி பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்  Gr. II (Console Operator), காலியிடம்: 1, சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300, தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்ப பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருப்பதுடன் தொடர்புடைய துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.இ., பி.டெக். முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: சீனியர் செகரட்ரியேட் அசிஸ்டென்ட் (Stenographer) காலியிடம்:2, சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100. தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் மற்றும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனம் ,மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனம் ஆகிய ஏதாவதொன்றில் சுருக்கெழுத்தாளராக மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டெண்ட், காலியிடம்: 2, சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200, தகுதி: பத்தாம் வகுப்பு, +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். https://www.nittrc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து ஜூலை 9 ஆம் தேதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இயக்குநர், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 600 113, தமிழ்நாடு, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.6.2025. காலதாமதம் செய்யாமல் தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mahindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mahindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Embed widget