மேலும் அறிய

JOB ALERT: அடிதூள்.! இன்டர்வியூக்கு வாங்க.. வேலையில் ஜாயின் பண்ணுங்க- ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு

JOB ALERT: தமிழக அரசு சார்பாக வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அயந்த வகையில் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 20.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்தவித கட்டணமும் இல்லை

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யவேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேகேட்டுக்கொண்டுள்ளார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 1,067 அப்ரண்டிஸ் பணிகள்! மாதம் ரூ.16,678 வரை உதவித்தொகை!
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 1,067 அப்ரண்டிஸ் பணிகள்! மாதம் ரூ.16,678 வரை உதவித்தொகை!
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் – மாதம் ரூ.12,300 வரை உதவித்தொகை!
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் – மாதம் ரூ.12,300 வரை உதவித்தொகை!
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதும்: இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இலவசப் பயிற்சி!
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதும்: இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இலவசப் பயிற்சி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Embed widget