மேலும் அறிய

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களை ஏமாற்றுவதே திமுக வேலையா? எழும் கேள்விகள்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது- அன்புமணி.

பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? ஊழியர்களை ஏமாற்றுவதே அரசு வேலையா? என்று பா.ம.க. தலைவர்  அன்புமணி இராமதாஸ் சாடியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.


பழைய நடைமுறையே தொடர வேண்டும்

தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என்றழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, 2003ஆம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் மோசடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு அரசு ஊழியர்கள் தீர்மானித்தனர்.

எந்தப் பணியையும் செய்ததாக தெரியவில்லை

அவர்களின் கோபத்தை அறிந்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி  தமிழக அரசு அறிவித்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குழு அறிவிக்கப்பட்டு 139 நாள்கள் நிறைவடைந்து விட்ட பிறகும் கூட, இதுவரை அக்குழு எந்தப் பணியையும் செய்ததாக தெரியவில்லை.

ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், பணி வரம்புகள் இன்று வரை மக்களின் பார்வைக்கு வைக்கப் படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? அல்லது வேறு வகையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமா? என்பதை சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன் விவாதித்துதான் முடிவெடுக்க முடியும். ஆனால், அதற்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் மூன்று அதிகாரிகளும் இதுவரை ஒன்று கூடி தங்களுக்கான திட்டத்தின் நோக்கம் குறித்து விவாதித்தார்களா? என்பது கூட தெரியவில்லை.

காலம் கடத்தும் செயல்


பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதே காலம் கடத்தும் செயல்தான் என்பதை கடந்த பிப்ரவரி மாதமே கூறியிருந்தேன். பத்தாண்டுகளுக்கு முன்பே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 2015&16ஆம் ஆண்டுகளில்  தீவிரமடைந்த நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்ததைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது  குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார்.

அப்பட்டமான ஏமாற்று வேலை

அக்குழு எந்த பணியையும் செய்யாத நிலையில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் இன்னொரு குழுவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்தார். அந்தக் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று தாக்கல் செய்து விட்ட நிலையில், திமுக அரசுக்கு மனம் இருந்தால் அதன் அறிக்கையையே செயல்படுத்தியிருக்கலாம். அதை விடுத்து புதிய குழுவை அமைத்ததே தவறு எனும்போது, அந்தக் குழுவும் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை.

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 6 லட்சத்து 24,140 பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மொத்த பணியாளர்களில் 90%க்கும் அதிகமாகும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து இதுவரை ஓய்வு பெற்ற 49,912 பேருக்கு சராசரியாக ரூ.10 லட்சம் வீதம் ரூ.4381 கோடி வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த பயன்களும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் இன்றிதான் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநிலை மீதமுள்ள 6.24 லட்சம் பேருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுகவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget