மேலும் அறிய

டிகிரி முடித்தவர்களுக்கு மயிலாடுதுறையில் அரசு வேலை: கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் முழு விபரம் இதோ..

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார். தகுதியுள்ள நபர்கள் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் உள்ள வட்டார அளவிலான பணிகளை மேற்கொள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinators) தேவைப்படுகிறார்கள்.

கல்வி மற்றும் இதர தகுதிகள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

*கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை (Any Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* கணினி அறிவு: MS Office கணினிப் பிரிவில் குறைந்தபட்சம் 3 மாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

* முன் அனுபவம்: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

*இருப்பிடச் சான்று: விண்ணப்பிக்கும் நபர்கள் தொடர்புடைய ஒன்றியத்தைச் (Block) சார்ந்தவராக இருப்பது அவசியம்.

* வாகன உரிமம்: இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்

இந்த நியமனம் குறித்து மாவட்ட நிர்வாகம் சில முக்கிய விதிமுறைகளை வகுத்துள்ளது:

*பணித்தன்மை: இந்த நியமனம் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. எனவே, இந்தப் பணியைக் காலமுறைப் பணியாகவோ அல்லது பணியினை முறைப்படுத்தவோ (Regularization) எவ்வித கோரிக்கையும் விடுக்க முடியாது.

*நன்னடத்தை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புது வாழ்வு திட்டம், IFAD திட்டம் அல்லது பிற அரசு நிறுவனங்களில் நிதி முறைகேடு அல்லது ஒழுக்கமின்மை காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

*செயல்திறன்: எவ்வித புகார்களுமின்றி, இதற்கு முந்தைய பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான அனைத்துக் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒரு மூடிய உறையில் வைத்து, நேரடியாகவோ அல்லது பதிவு/விரைவுத் தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை.

கடைசி நாள்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.02.2026 மாலை 05.00 மணி ஆகும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த வேலைவாய்ப்பு முக்கியமானது?

கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. மகளிர் குழுக்களை உருவாக்குதல், அவர்களுக்கு வங்கிக் கடனுதவி பெற்றுத் தருதல் மற்றும் பயிற்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற சமூகப் பொறுப்புள்ள பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாகும். தகுதியுள்ள மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Embed widget