TIIC-இல் மார்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணி.. பட்டதாரி இளைஞர்கள் நவ.7-க்குள் அப்ளை பண்ணலாம்..!
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் தான் இப்பணிகளுக்கு நியமனம் செய்யப்படுவார்கள்.
TIIC எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழக அரசின் கீழ் கடந்த 1949 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(TIIC) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற் கல்வி படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோருக்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தொழில் தொடங்குவதற்கு இந்த தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.10 இலட்சம் முதல் ஐந்து கோடி வரை வங்கிகளில் கடனுதவி பெற்றுத்தர உதவியாக உள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் முதலீட்டு கழகம் செயல்பட்டு இதுப்போன்ற பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் புதிதாக தொழில்துவங்க நினைக்கும் முதல் தலைமுறை இளைஞர்களை ஊக்குவிப்பதோடு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கிவருகிறது. இப்படி பல்வேறு இளைஞர்களின் வாழ்வாதரத்திற்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ள இந்தத் தொழில்முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க கூடிய நிலையில், வேறு என்ன தகுதிகள்? உள்ளது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
Marketing Executive பணிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் முடித்திருக்க வேண்டும். இதோடு கணினியைக் கையாள்வதற்கான போதிய திறன் பெற்றிருக்க வேண்டும். நிதி சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவையில் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் 21 வயது முதல் 33 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், http://tiic.co.in/mktg_recruitment/Dashboard.aspx என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அந்தப்பக்கத்தில் உள்ள அப்ளே என்பதை கிளிக் செய்து மார்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணிக்கு வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை :
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் தான் இப்பணிகளுக்கு நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.tiic.org/wp-content/uploads/2021/10/Marketing-Executive_Systems-converted-1.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். எனவே வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளலாம்.