மேலும் அறிய

Madras University Recruitment:முனைவர் பட்டம் பெற்றவரா? சென்னைப் பல்கலை., வேலைவாய்ப்பு - முழு விவரம்!

Madras University Recruitment 2023: சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

Madras University Recruitment 2023: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி பிரிவில் தற்காலிக உதவி பேராசியர், இணை  பேராசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Madras University Recruitment:முனைவர் பட்டம் பெற்றவரா? சென்னைப் பல்கலை., வேலைவாய்ப்பு - முழு விவரம்!

பணி விவரம்:

உதவி பேராசிரியர்

இணை பேராசிரியர்

கல்வித் தகுதி

  • இந்தப் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். 
  • முதுகலை படிப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இதற்கு குறைந்தது எட்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • NET / SLET  ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வு இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். 
  • பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு இதழ்களில் கட்டுரைகள் பிரசுரமாகி 75 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ், வணிகவியல், வரலாறு, பொருளியல், உளவியல், பி.பி.ஏ., எம்,பி.ஏ., பி.எட், ஆகிய துறைகளில் உதவி பேராசிரியர் / இணை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இதற்கு வழங்கப்படும் ஊதிய விவரம் தொடர்பாக ஏதும் தகவல் குறிப்பிடப்படவில்லை. 

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.08.2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Registrar, University of Madras,

Chepauk,

Chennai 600 005. 

******

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பினை வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய  பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Health Inspector Grade-II

மொத்த பணியிடங்கள் - 1,066

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Health Worker (Male) course / Health
Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக்கல்வி பயின்றிருக்க வேண்டும். 
ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-11)

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/HI_Gr2_notification_110723.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget