மேலும் அறிய

Job Alert: சமூக நலத்துறை வேலைவாய்ப்பு..! நீங்கள் செய்ய வேண்டியது தான்..!

காஞ்சிபுரம் என்ற முகவரியில் 08.01.2024 ஆம் தேதி மாலை 5.45 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வி மற்றும் இதர தகுதிகள்

தமிழ்நாடு சமூக நலத் துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.எனவே, அக்காலிப் பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்பபடிவத்தினை https://kancheepuram.nic.in/   என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் 08.01.2024 ஆம் தேதி மாலை 5.45 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,  தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணிதம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை செவித்திறன் குறையுடையோருக்கான மாணவ/மாணவியர்களுக்கு பயிற்றுவிக்க மாதம் ரூ.15,000/- மதிப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கீழ்காணும் கல்வித் தகுதியுடன் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

கணித ஆசிரியர் பட்டதாரி பணியிடத்திற்கான தகுதி:

  1. B.Sc., or M.Sc., Maths with B.Ed.
  2. Senior Diploma in Teaching  the  Deaf or B.Ed Special Education.

வரலாறு ஆசிரியர் பட்டதாரி பணியிடத்திற்கான தகுதிகள்:

  1. B.A History or M.A History with B.Ed
  2. Senior Diploma in Teaching  the Deaf or B.Ed Special Education.

மேற்கண்ட பட்டதாரி பணியிடங்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இனத்தவரும் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பு இல்லை. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தகுந்த கல்வி சான்றிதழ் நகல்களுடன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி , சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 27.12.2023 மாலை 5  மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget