மொராக்கோ, அல்ஜீரியாவில் காணப்படும் ஆர்கன் மரத்தில் இருந்து இந்த ஆர்கன் ஆயில் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் சருமத்திற்கு நல்லது.
தேயிலை மர எண்ணெய் தேயிலைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை மசாஜ் செய்தால் முகத்திற்கு நல்லது ஆகும்.
திராட்சை விதைகளில் இருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள், ஆன்டி மைக்ரோபியல்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் உகந்தது.
ஜோஜோபா எண்ணெய். இது தோலுக்கு மிகவும் சிறந்தது. ஈரப்பதத்தை தக்கவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எண்ணெய் மூலம் மசாஜ் செய்வதில் முகத்தில் வறட்சி ஏற்படாது.
ரோஸ் சிப் ஆயில் எனப்படும் இந்த எண்ணெய் சருமத்தை பிரகாசம் ஆக்கும். கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதைவைத்து மசாஜ் செய்தால் முகத்திற்கு நல்லது ஆகும்.
சூரியகாந்தியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய், தோலுக்கு மிகவும் நல்லது ஆகும். வைட்டமின் ஈ சத்து நிறைந்த இந்த எண்ணெய்யை முகத்திற்கு தேய்த்து வந்தால் முகம் பளபள என்று மின்னும்.
சணல் விதை எண்ணெயில் காமெடோஜெனிக், ஒமேகா சத்து நிறைந்துள்ளது. இதை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகம் பளபள என்று மின்னும்
மருலா பழத்தில் இருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. சருமத்தை இது ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.
ஸ்குவாலீன் எண்ணெய் சில தாவரங்களின் சப்போனிஃபையபிளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் மூலம் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள கோடுகள் குறையும்