மேலும் அறிய

IAF Agniveer Recruitment 2024:விமானப் படையில் பணி;விண்ணப்பிக்க நாளையே கடைசி - மறந்துடாதீங்க!

IAF Agniveer Vayu Recruitment 2024: இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கலாம்

IAF Recruitment 2024: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளையே (பிப்ரவரி,6-ம் தேதி) கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

பணி விவரம்:

அக்னிவீர்வாயு பணியாளர்கள்

அக்னிபத் திட்டம் 

அக்னி பத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 

அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

கல்வித் தகுதி: 

  • இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். 
  • வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • +2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  •  மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் வோக்கேசனல் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 21- வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் 
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf - தெரிந்துகொள்ளலாம். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IAF Agniveer Recruitment 2024:விமானப் படையில் பணி;விண்ணப்பிக்க நாளையே கடைசி - மறந்துடாதீங்க!

அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி

4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in  -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 17-தேதி உடற்தகுதித் தேர்வு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Physical Fitness Test (PFT)

IAF Agniveer Recruitment 2024:விமானப் படையில் பணி;விண்ணப்பிக்க நாளையே கடைசி - மறந்துடாதீங்க!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2024

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ https://agnipathvayu.cdac.in/AV/- வலைத்தளத்திற்கு செல்லவும் 
  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்
  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யது ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு முழுவதும் அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு வரும் 13-ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. விவரத்திற்கு..மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget