HVF Avadi Recruitment: பி.இ. பட்டம், டிப்ளமோ பெற்றவரா? கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
HVF Avadi Recruitment: ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் உள்ள வேலைக்கு விண்னப்பிக்கும் முறைகள் பற்றிய விவரங்களை காணலாம்.
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் (HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI) ஒப்பந்தம் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி விவரம்:
- ஜூனியர் மேலாளர் -(Design)
- டிப்ளமோ டெக்னீசியன் - (Civil)
- டிப்ளமோ டெக்னீசியன் - (Quality & Inspection)
- டிப்ளமோ டெக்னீசியன் - (Design
- டிப்ளமோ டெக்னீசியன் - (Blacksmith)
- ஜூனியர் டெக்னீசியன் -(Electrician)
- ஜூனியர் டெக்னீசியன் - (Fitter Electronics)
- ஜூனியர் டெக்னீசியன் - (Fitter General)
- ஜூனியர் டெக்னீசியன் - (Fitter Auto Electric)
- ஜூனியர் டெக்னீசியன் - (Fitter AFV)
- ஜூனியர் டெக்னீசியன் - (Millwright)
- ஜூனியர் டெக்னீசியன் - (Machinist)
- ஜூனியர் டெக்னீசியன் - (OMHE)
- ஜூனியர் டெக்னீசியன் - (Rigger)
- ஜூனியர் டெக்னீசியன் -(Painter)
- ஜூனியர் டெக்னீசிய -(Welder)
- உதவியாளர் ((Legal) )
- கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் n Engineering Design/ Tool Engineering அகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.டெக் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
டிப்ளமோ டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜுனியர் டெக்னீசியன் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். NAC/ NTC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சட்டத்துறையில் உதவியாளர் பணிக்கு விண்னப்பிக்க LLB படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு e 10+2+3 (or) 10+2+4 (or) 10+2+5 ஆகிய முறையில் படித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- ஜூனியர் மேலாளர் - ரூ.30,000/-
- டிப்ளமோ டெக்னீசியன் - ரூ.23,000/-
- ஜூனியர் டெக்னீசியன் - ரூ.21,000/-
- உதவியாளர் - ரூ.23,000/-
இதோடு Dearness Allowance, Special Allowance @ 5% of Basic Pay மற்றும் இன்ரிமெண்ட் (Annual increment at the rate of 3% on the basic pay during the tenure) ஆகியவை பணி காலத்தில் வழங்கப்படும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் மற்றும் திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் https://www.avnl.co.in/ - அல்லது
என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.07.2024
இது தொடர்பான முழு விவரங்களுக்கு https://avnl.co.in/files/careers-vacancies-document/HVF_Detailed_advertisement_271_0.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
THE CHIEF GENERAL MANAGER,
HEAVY VEHICLES FACTORY,
AVADI, CHENNAI – 600054.
TAMILNADU