மேலும் அறிய

HCL Jobs: மிஸ் பண்ணிடாதீங்க..! வேலைவாய்ப்பு, உதவித்தொகையுடன் ஓராண்டு இலவசப் பயிற்சி - முழு விவரம் உள்ளே..!

2021-2022 ஆம்‌ ஆண்டு 12-ம்‌ வகுப்பில்‌ 60% மதிப்பெண்களுடன்‌ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம்‌ பயிற்சியோடு பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. 

2021 அல்லது 2022 ஆண்டுகளில்‌ 12-ஆம்‌ வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ மற்றும்‌ தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம்‌ இணைந்து வழங்கும்‌ வேலைவாய்ப்புடன்‌ கூடிய ஓராண்டு பயிற்சித் திட்டத்தை வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

2021-2022 ஆம்‌ ஆண்டு 12-ம்‌ வகுப்பில்‌ 60% மதிப்பெண்களுடன்‌ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம்‌ பயிற்சியோடு கீழ்க்கண்ட பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. 

தமிழக அரசின்‌ "நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ வாயிலாக தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌, அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ 2,000 நபர்களுக்கு HCL "Early Career Program" திட்டத்துக்கான பயிற்சிக் கட்டணம்‌ முழுவதையும்‌ வழங்குகின்றது.

இத்திட்டத்தின்‌ வாயிலாக மாணவர்களுக்கு:

தமிழகத்தின்‌ எந்த பகுதியில்‌ இருந்தாலும்‌ பயிற்சியோடு HCL-ல்‌ கீழ்க்கண்ட முழு நேரப் பணி வாய்ப்பை வழங்குகின்றது.

> Software Developer
> Analyst, Design Engineer
> Data Engineer
> Support & Process Associate
> Service Desk and DPO

Internship பயிற்சியின்‌ போது 7வது மாதம்‌ முதல்‌, மாதம்தோறும்‌ ரூபாய்‌ 10,000/- உதவித்தொகையை பெறலாம்‌. பணியில்‌ சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய்‌ 1.70 லட்சம்‌ முதல்‌ 2.20 லட்சம்‌ வரை (பணி நிலைக்கு ஏற்றாற்போல்‌) பெறலாம். 

HCL- ல்‌ பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும்‌ SASTRA பல்கலைக்கழகங்களில்‌ வாய்ப்பினை பெற்றுத்‌ தருகின்றது. மேலும்‌ அவர்களின்‌ கல்விக்‌ கட்டணத்தின்‌ ஒரு பகுதியை HCL நிறுவனம்‌ வழங்குகின்றது. மேலும்‌ இத்திட்டமானது மாணவர்கள்‌ சிறு வயதிலேயே உலகளாவிய தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனத்தில்‌ தங்கள்‌ பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம்‌ முழுவதிலும்‌ இந்த HCL TechBee திட்டத்தின்‌ தேர்வு முகாமினை அக்டோபர்‌ 28 முதல்‌ 30-ம்‌ தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும்‌ ஈரோடு ஆகிய மாவட்டங்களில்‌ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌ சேர்ந்து பயன்பெறுமாறு (தகுதியுள்ள மாணவர்களை ) தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழக மேலாண்மை இயக்குநர்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

மேலும்‌ விவரங்களுக்கு:

சென்னை - 88079 40948.

மதுரை - 9788156509. 

திருநெல்வேலி- 98941 52160.

திருச்சி - 94441 51303.
கோயம்புத்தூர்‌, ஈரோடு, திருப்பூர்‌ - 89032 45731, 98655 35909.

இதற்கு விண்ணப்பிக்க: https://registrations.hcltechbee.com/ 

இதையும் வாசிக்கலாம்: AITT Exam: அகில இந்திய துணை தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு,‌ பயிற்சித்துறை அறிவிப்பு 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget