மேலும் அறிய

இலவச IT பயிற்சி & வேலைவாய்ப்பு! TCS, WIPRO, Cognizant-ல் பணி! கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள்?

கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி படித்தவரா நீங்கள். அட்டகாசமான இலவச பயிற்சியும் வேலைவாய்ப்பும் உங்களை தேடி வந்து இருக்குங்க. என்னன்னு தெரியுங்களா? 

 

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி சார்ந்த பொறியியல் படிப்பை முடித்தவரா நீங்கள்? நல்ல வேலைவாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் திறன் பயிற்சிகளைதான்.

தமிழ்நாடு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திறன் வளர்ச்சி பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில், தற்போது கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் டிகிரி முடித்தவர்களுக்கு ServiceNow Developer மற்றும் Salesforce Developer ஆகிய இரண்டு சான்றிதழ் படிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சி பெறும் நபர்களுக்கு பிளேஸ்மெண்ட் மூலம் TCS, WIPRO, Cognizant ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு இளைஞர்களுக்கு பல்துறைகளில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். மேலும், முன்னணி தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படும். பயிற்சி காலத்திற்கு உதவித்தொகை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் சார்ந்து படித்தவர்களுக்கான டெவலர்ப்பர் பயிற்சிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஸ்மார்ட்பிரிட்ஜ் கல்வி சேவைகள் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer ஆகிய இரண்டு சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது. ServiceNow Developer பயிற்சி மூலம் சேவை வழங்கும் தளத்தை வடிவமைத்தல், அதனின் பராமரிப்பு, தவறை சரிசெய்தல், சரிபார்த்தல் மற்றும் CMDB Modules ஆகியவை கற்பிக்கப்படும். இதில் உள்ள ஐடி சாரந்த தீர்வுகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்படும்.

Salesforce Developer பயிற்சி மூலம் சேலஸ் சாப்ட்வேர் உருவாக்குதல், இணையதள மேம்பாடு, வணிகம் சார்ந்த மென்பொருள் உருவாக்கம், பராமரிப்பு, சரிசெய்தல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த சான்றிதழ் படிப்புகள் மொத்தம் 360 மணி நேரத்திற்கு வழங்கப்படும். அதில் 180 மணி நேரம் நேரடி வகுப்பாகவும், 180 மணி நேரம் ஆன்லைன் வழியாகவும் வழங்கப்படும். நேரடி செயல்முறை திட்டங்களுடன் வகுப்புகள் அமையும். இதனால், உருவாக்கத்திற்கு தேவையான தகவல்கள் மட்டுமின்றி, செயல் வழியாகவும் அறிந்துகொள்ளலாம். இது மாணவர்களுக்கு பணிக்கு தேவையான திறனை வளர்த்துகொள்ள உதவியாக இருக்கும். அருமையான இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது எதிர்கால வாழ்க்கைக்கு சிறப்பான அடித்தளமாக அமையும். கோயம்புத்தூர், கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இப்பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) அல்லது அதற்கு நிகரான பொறியியல் பட்டப்படிப்பு (BE/B.Tech) முடித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக எளிமையாக விண்ணப்பிக்கலாம். ServiceNow Developer பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4416 என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Salesforce Developer பயிற்சிக்கு https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4418 என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதி அடையும் இளைஞர்களுக்கு TCS, WIPRO மற்றும் Cognizant ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. வேலை தேடுபவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற ஆர்வமுள்ளவர்கள், திறனை வளர்த்துகொள்ள விரும்புகிறவர்கள், வணிக பயன்பாட்டு சாப்ட்வேர்களை பற்றி கற்றுகொள்ள விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறுங்கள்.

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget